Home /News /business /

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் மாற்றம்

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் மாற்றம்

Bank

Bank

HDFC Bank Interest Rate | பல்வேறு வங்கிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறைவான வட்டி விகிதங்களை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு, தற்போது வட்டி விகிதங்களை வங்கிகள் அதிகரிக்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
தற்போது வங்கிச் சேவைகள் பாஸிட்டிவ் டிரெண்ட் நோக்கிய திசையில் சென்று கொண்டிருப்பதால், பெரும்பாலான வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை உயர்த்திருக்கிறது ஹெச்டிஎஃப்சி வங்கி.

நாட்டில் உள்ள தனியார் துறை வங்கிகளிலேயே மிகவும் பெரியதாகக் கருதப்படும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலமாக, அங்கு கணக்கு வைத்துள்ள எண்ணற்ற வாடிக்கையாளர்கள் பலன் அடைவார்கள் என்று கருதப்படுகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து ஹெச்டிஎஃப்சி வங்கியின் இணையதளத்தில் அவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வட்டி விகித விவரங்கள்:

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஹெச்டிஎஃப்சி வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், ரூ.50 லட்சத்துக் மேல் மற்றும் ரூ.1,000 கோடிக்கு குறைவாக பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் 3.50 சதவீதமும், ரூ.1,000 கோடிக்கு மேல் பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 4.50 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.



திருத்தப்பட்ட வட்டி விகிதம்:

* சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கு குறைவாக பேனஸ் இருப்பவர்களுக்கு - ஆண்டுதோறும் 3 சதவீத வட்டி
* ரூ.50 லட்சம் முதல் ரூ.1,000 கோடி வரையில் - ஆண்டுதோறும் 3.50 சதவீதம் வட்டி
* ரூ.1,000 கோடிக்கு மேல் சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் - 4 சதவீத வட்டி

Also Read : பேங்க் போறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை தெரிஞ்சிட்டு போங்க... காசோலை முறையில் புதிய மாற்றம்!

திருத்தப்பட்ட வட்டி விகிதம் அனைத்தும் உள்நாட்டு கணக்குகள் மற்றும் என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ போன்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேமிப்புக் கணக்குகளில் வட்டி விகிதம் என்பது உங்கள் கணக்குகளில் நீங்கள் வைத்திருக்கும் தினசரி பேலன்ஸ் தொகையை பொறுத்து கணக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் வட்டி விகிதம் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரெக்கரிங் டெபாசிட், பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட கணக்குகளில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தி அமைக்கப்பட்டது.

Also Read : RBL வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? அனைத்து வட்டி விகிதங்களும் மாறிடுச்சு!

பல்வேறு வங்கிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறைவான வட்டி விகிதங்களை பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு, தற்போது வட்டி விகிதங்களை வங்கிகள் அதிகரிக்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அமைந்துள்ளது. இனி வரும் நாட்களிலும், பேஸ் ரேட் அதிகரிக்குமானால், அதற்கேற்ப வட்டி விகிதங்களை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Bank accounts, HDFC Bank, Interest rate hike

அடுத்த செய்தி