• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்கள் பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது? முழு விவரம்!

உங்கள் பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது? முழு விவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

எந்தவொரு பணியாளரும் தங்கள் வேலையை விட்டு விலகும் போதோ அல்லது 58 வயதை எட்டிய பின்னர் சேவையில் இருந்து ஓய்வு பெறும்போதோ அவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை (Provident Fund) திரும்பப் பெற உரிமை கோரலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு பிஎஃப் பணம் பிடித்தம் செய்வது வழக்கம். எனவே எந்தவொரு பணியாளரும் தங்கள் வேலையை விட்டு விலகும் போதோ அல்லது 58 வயதை எட்டிய பின்னர் சேவையில் இருந்து ஓய்வு பெறும்போதோ அவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை (Provident Fund) திரும்பப் பெற உரிமை கோரலாம். தற்போதைய EPF விதிப்படி, ஓய்வுபெறும் வயதிற்கு முன்னர் ஊழியர் தனது வேலையை விடும் பட்சத்தில், அவர் சுமார் 60 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வேலையில்லாமல் இருந்தால் முழு பிஎஃப் நிலுவைத் தொகையையும் திரும்பப் பெறலாம்.

    மொத்த ஈபிஎஃப் இருப்பு என்பது ஊழியர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் இரண்டையும் உள்ளடக்கியது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பி.எஃப் தொகையை திரும்பப் பெற விரும்பும் உறுப்பினர்கள் ஆன்லைனில் EPF வித்ட்ராவல் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உரிமை கோரலாம். இருப்பினும், அவர்களின் ஆதார் எண் யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் (UAN) இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் திரும்பப் பெறும் உரிமைகோரல் வசதியைப் பயன்படுத்த முடியும்.

    ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை வித்ட்ராவல் செய்வதற்கான படிவத்தை நேரடியாகவோ அல்லது ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பூர்த்தி செய்யலாம். ஆன்லைனில் PF-ஐ எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற லிங்கில் உள்நுழைந்து UAN போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். அதில் உங்கள் UAN நம்பர் மற்றும் கடவுச்சொல் (Password) மற்றும் அதில் காண்பிக்கும் கேப்ட்சாவை டைப் செய்து உள்நுழைய வேண்டும்.

    2. அதன் பிறகு, நீங்கள் ‘Manage’ என்ற மெனுவை கிளிக் செய்து, அதில் தோன்றும் KYC மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது KYC விவரங்களான ஆதார், பான் மற்றும் வங்கி விவரங்கள் சரியானவை தான் என்பது சரிபார்க்கப்பட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

    3. அதன் பிறகு, நீங்கள் ‘Online Services’ என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘Claim (Form-31, 19 & 10C)’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    4: உரிமைகோரல் (Claim) விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்த பிறகு, புதிய திரை ஒன்று உறுப்பினர் விவரங்கள், KYC விவரங்கள் மற்றும் பிற சேவை விவரங்களைக் காண்பிக்கும். அதில் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை டைப் செய்த பின்னர் ‘Verify’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

    5: அடுத்ததாக நீங்கள் சான்றிதழில் கையொப்பமிட ‘Yes’ என்பதைக் கிளிக் செய்து தொடரவும்.

    6: பின்னர் ‘ஆன்லைன் உரிமைகோரலுக்கு தொடரவும்’ (Proceed for Online claim) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

    7: அடுத்ததாக ஒரு புதிய திரை தோன்றும். அதில் ‘நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்’ (I Want To Apply For) என்ற விருப்பத்தின் கீழ் முழு ஈபிஎஃப் செட்டில்மென்ட், ஈபிஎஃப் பார்ட் வித்ட்ராவல் (லோன் / அட்வான்ஸ்) மற்றும் பென்ஷன் வித்ட்ராவல் போன்ற உரிமைகோரல் படிவத்தில் இருந்து உங்களுக்குத் தேவையான உரிமைகோரலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வேலையை விட்ட பிறகு உங்கள் தொகையை முழுமையாக பெற விரும்பினால் Form- 19 & 10C படிவங்களை தனித்தனியே பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    8: அதுவே நீங்கள் பகுதி தொகையை திரும்பப் பெற விரும்பினால்‘பி.எஃப் அட்வான்ஸ் (படிவம் 31)’ ஐத் தேர்வுசெய்து, அட்வான்ஸ் தொகை பெறுவதற்கான காரணம், தேவையான தொகை மற்றும் பணியாளரின் முகவரி போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.

    Also read... பயன்படுத்தாத வேலட்டுகளுக்கு கட்டணம் - மொபிக் விக், பேடிஎம், ப்ரீ ரீச்சார்ஜ் அக்கவுண்டுகளை ஆக்டிவேட் செய்வது எப்படி

    9: நீங்கள் சான்றிதழைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்த நோக்கத்திற்காக ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படலாம்.

    படி 10: உங்கள் வித்ட்ராவல் கோரிக்கை முதலில் உங்கள் முதலாளியால் அங்கீகரிக்கப்பட வேண்டும், அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு மட்டுமே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் பெறுவீர்கள்.

    இருப்பினும், பி.எஃப் ஆன்லைனில் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் பின்வரும் விஷயங்களை செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவை,

    1. உங்கள் UAN செயல்படுத்தப்பட்டு மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    2. UAN உங்கள் KYC விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
    3 . உங்கள் முந்தைய பிஎஃப் கணக்குகள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: