ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரிடிட் கார்டு கடன் அடைக்க பர்சனல் லோன் வாங்கலாமா? - நிதி ஆலோசனை

கிரிடிட் கார்டு கடன் அடைக்க பர்சனல் லோன் வாங்கலாமா? - நிதி ஆலோசனை

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

பல கடன்களுக்காக தனித்தனியாக EMI செலுத்துவதற்கு மாறாக நாம் ஒரே முறையாக பர்சனல் லோன் பெற்று அந்த கடனை அடைத்து விடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்கள் பர்சனல் லோன் பல காரணங்களுக்காக பெறுகிறார்கள். ஆனால் எந்த காரணங்களுக்காக எல்லாம் நீங்கள் பர்சனல் லோன் வாங்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

நிறைய இடங்களில் நாம் பல காரணங்களுக்காக கடன் வாங்கி இருப்போம். ஆனால் அந்த கடன்களுக்கு தனித்தனியாக EMI செலுத்துவதற்கு மாறாக நாம் ஒரே முறையாக பர்சனல் லோன் பெற்று அந்த கடனை அடைத்து விடலாம்.

இதையும் படிக்க :  நிலையான வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்கான அரசின் முதலீட்டு திட்டங்கள்.!

ஆனால் அந்த கடன்களின் வட்டி விகிதத்தை விடவும் நாம் வாங்கும் பர்சனல் லோனின் வட்டி விகிதம் குறைவாக உள்ளதா என்பதை கவனிக்க தவறக்கூடாது. அதேபோல பலருக்கு தாங்கள் உபயோகிக்கும் கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி கட்டுவதற்கான புரிதல் சரியாக இருப்பதில்லை. எனவே நீங்கள் பர்சனல் லோன் வாங்கி அந்த பணத்தின் மூலம் உங்களின் கிரெடிட் கார்டின் கடனை அடைக்கலாம். கிரெடிட் காட்டுகளின் வட்டி விகிதத்தை விடவும் உங்களின் பர்சனல் லோனின் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இருக்கும் வீட்டை நீங்கள் புதுபிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஹோம் லோன் எடுக்கலாம். அப்படி உங்களுக்கு ஹோம் லோன் கிடைக்காத பட்சத்தில், நீங்கள் பர்சனல் லோன் எடுக்கலாம். அப்படி பர்சனல் லோன் எடுத்து நீங்கள் வீட்டை மேம்படுத்தி விற்கிறீர்கள் என்றாலும், பர்சனல் லோன் எடுக்கலாம்.

மேலும், உங்களுக்கு திடீரென மருத்துவ தேவைகளுக்காக பணம் தேவைப்பட்டால்லும் நீங்கள் பர்சனல் லோன் எடுக்கலாம்.

First published:

Tags: Bank Loan, Banking, Personal Loan