பி.எம். கிஷான் நிதி பெறுவது எப்படி: இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

மாதிரிப் படம்

வங்கிக் கணக்கில் உள்ள பயனாளியின் பெயர் அவர்களின் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்யும் போது கவனம் செலுத்துங்கள்.

  • Share this:
    பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பெறுவதற்கு விண்ணப்பிப்பதில் பொதுவாக செய்யப்படும் தவறுகள் என்ன என்பதை அறிந்துகொண்டால், தவறு இல்லாமல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும்.

    பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டமாகும்.  நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயிகளின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2000  ரூபாய் என ஆண்டுக்கு 6000 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இந்த திட்டத்திற்கான 9ம் கட்ட நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். தற்போது 9.75 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில்  ரூ.19,500 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல விவசாயிகள் சரியான நேரத்தில் விண்ணப்பித்தாலும்,  அவர்களின் பெயர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும்  அவர்களுக்கு தவணை பணம் கிடைப்பதில்லை.

    விவசாயிகள் செய்யும் தவறுகள் என்ன?

    சில நேரங்களில், விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குக்கு தவணை பணம் செலுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படும். இத்திட்டத்தின் கீழ், விண்ணப்ப படிவத்தில் பயனாளியின் பெயரை ‘ஆங்கிலத்தில்’ குறிப்பிடுவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு விவசாயியின் பெயர் தமிழ் அல்லது வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அடுத்த தவணை வருவதற்கு முன்பு அவர்கள் பெயரை ஆங்கிலத்தில் திருத்த வேண்டும்.

    இதையும் படிங்க: அடுத்த ஆண்டில் அதிக ஊதிய உயர்வு: எந்தெந்த துறையினருக்கு கிடைக்க வாய்ப்பு!


    வங்கிக் கணக்கில் உள்ள பயனாளியின் பெயர் அவர்களின் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்யும் போது கவனம் செலுத்துங்கள்.

    திருத்தங்கள் செய்வதற்கு  பிஎம் கிஷானின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கமான Https://pmkisankgovkin/ பகுதிக்கு செல்லுங்கள்.  பின்னர், 'ஆதார் அட்டை விவரங்களைத் திருத்து' விருப்பத்தை கிளிக் செய்யவும். உள்நுழைவு விவரங்களை நிரப்பி, கேப்ட்சா குறியீட்டை நிரப்புவதன் மூலம் உங்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

    மேலும் படிக்க: உங்களிடம் சொந்த வீடு இருக்கா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

    உள்நுழைந்த பிறகு, உங்கள் பெயரில் ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் அதை ஆன்லைனில் திருத்தலாம் மற்றும் உங்கள் விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கணக்காளர் மற்றும் விவசாயத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

    அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும் நீங்கள் தவணை பெறவில்லை என்றால், பிஎம் கிசான் சம்மானின் உதவி எண்ணில் புகார் பதிவு செய்யலாம்.உதவி எண் 011 24300606 /011 23381092. இது தவிர, திங்கள் முதல் வெள்ளி வரை, PMkisanict@gov.in என்ற மெயில் முகவரியில் PM கிசான் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: