Home /News /business /

முதலீடு செய்தால் சிறந்த ஆதாயங்கள் தரும் 7 LIC பிளான்கள் இங்கே..!

முதலீடு செய்தால் சிறந்த ஆதாயங்கள் தரும் 7 LIC பிளான்கள் இங்கே..!

LIC

LIC

LIC Plans | நாட்டின் முன்னணி காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனமாக திகழ்ந்து வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), இன்ஷூரன்ஸ் வாங்குபவர்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவான இன்ஷூரன்ஸ் பிளான்களை வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
    ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் (Life Insurance policies) குறைந்த ஆபத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன. நாட்டின் முன்னணி காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனமாக திகழ்ந்து வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), இன்ஷூரன்ஸ் வாங்குபவர்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவான இன்ஷூரன்ஸ் பிளான்களை வழங்குகிறது.

    தற்போதைய நிலையற்ற சந்தை சூழ்நிலையில் உறுதியான வருமானத்துடன் சில நீண்ட கால முதலீட்டை நீங்கள் செய்ய நினைத்தால் LIC-யின் பாலிசிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். எல்ஐசி பாலிசிகள் உறுதியான வருவாயை வழங்குகின்றன. இந்த ஆண்டில் முதலீடு செய்வதற்கான சிறந்த 7 எல்ஐசி பாலிசிகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜீவன் லைஃப் பாலிசி (Jeevan Labh Policy):

    எல்ஐசி-யின் ஜீவன் லஃப் பாலிசி என்பது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும், இணைக்கப்படாத, லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் பிளான் ஆகும்இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் கலவையை வழங்குகிறது. இந்த பிளான் மெச்சூரிட்டிக்கு முன் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. இந்த திட்டம் எல்ஐசி வழங்கும் பெஸ்ட்-செல்லிங் எண்டோவ்மென்ட் பிளான்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    - திட்டம் எண். 936

    - UIN எண். 512N304V02

    - குறைந்தபட்ச வயது: 8 ஆண்டுகள்

    - அதிகபட்ச வயது: 50-59 ஆண்டுகள்

    - அடிப்படைத் தொகை: ரூ 2,00,000 முதல் ....

    - அதிகபட்ச முதிர்வு வயது: 75

    எல்ஐசி-யின் புதிய எண்டோமென்ட் பிளான் (LIC’s New Endowment Plan):

    LIC புதிய எண்டோவ்மென்ட் திட்டம் என்பது நான்-லிங்க்டு இன்ஷூரன்ஸ் பாலிசியாகும். இது உத்தரவாதமான வருமானம் மற்றும் போனஸ் வழங்குகிறது. 12 முதல் 35 ஆண்டுகள் வரை பாலிசியைப் பெறலாம். மெச்சூரிட்டிக்கு முன் எந்த நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்திற்கு நிதி உதவியையும், உயிரோடிருக்கும் பாலிசிதாரர்களுக்கு மெச்சூரிட்டிக்கு பின் நல்ல மொத்தத் தொகையையும் வழங்குகிறது.

    - திட்டம் எண். 914

    - UIN எண். 512N277V02

    - குறைந்தபட்ச வயது: 8 ஆண்டுகள்

    - அதிகபட்ச வயது: 55 ஆண்டுகள்

    - அடிப்படைத் தொகை: ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை

    - அதிகபட்ச முதிர்வு வயது: 75

    எல்ஐசி-யின் நியூ ஜீவன் ஆனந்த் (LIC's New Jeevan Anand):

    எல்ஐசியின் புதிய ஜீவன் ஆனந்த் என்பது நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், இண்டிவிஜூவல், ஆயுள் உத்தரவாத திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டைப் பலனை வழங்குகிறது. காப்பீடு செய்தவர் மரணித்தால் இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் பாலிசியின் முடிவில் உயிர் பிழைத்திருந்தால் மொத்த தொகையையும் வழங்குகிறது.

    - திட்டம் எண். 915

    - UIN எண். 512N279V02

    - குறைந்தபட்ச வயது: 8 ஆண்டுகள்

    - அதிகபட்ச வயது: 50 ஆண்டுகள்

    - அடிப்படை தொகை: ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை

    - அதிகபட்ச முதிர்வு வயது: 75

    ஜீவன் லக்ஷ்யா (LIC's Jeevan Lakshya):

    இந்த பிளான் குடும்பத்தின் தேவைகளை, முதன்மையாக குழந்தைகளின் நலன்களை பூர்த்தி செய்ய உதவும் வருடாந்திர வருமான பலனை வழங்குகிறது. முதிர்ச்சிக்கு முன் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால் கூட மெச்சூரிட்டி நேரத்தில் ஒரு மொத்த தொகையுடன் சேர்த்து நாமினிக்கு வழக்கமான ஆண்டு வருமானம் வழங்கப்படும்.

    - திட்டம் எண். 933

    - UIN எண். 512N297V02

    - குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

    - அதிகபட்ச வயது: 50 ஆண்டுகள்

    - அடிப்படைத் தொகை: ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை

    - அதிகபட்ச முதிர்வு வயது: 65

    ஜீவன் உமாங் (jeevan Umang):

    இந்த பிளான் உங்கள் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டின் கலவையை வழங்குகிறது. பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு காலம் வரையிலான வருடாந்திர உயிர்வாழ்வுப் பலன்களை (annual survival benefits) வழங்குகிறது மற்றும் மெச்சூரிட்டி போது அல்லது பாலிசிதாரர் இறந்தால் மொத்த தொகையை வழங்கப்படுகிறது.

    - திட்டம் எண். 945

    - UIN எண். 512N312V02

    - குறைந்தபட்ச வயது: 90 நாட்கள்

    - அதிகபட்ச வயது: 55 ஆண்டுகள்

    - பிரீமியம் செலுத்தும் காலம்: 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள்

    - அடிப்படைத் தொகை: ரூ 2,00,000 முதல் வரம்புகள் இல்லை

    - அதிகபட்ச முதிர்வு வயது: 100

    புதிய குழந்தைகளுக்கான பணத்தை மணி பேக் பிளான் (New Children's Money Back Plan):

    எல்ஐசியின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான மணி பேக் பிளான் என்பது ஒரு காப்பீட்டு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். இது ஒரு குழந்தைக்கு 25 வயதாகும் போது அவர்களின் நிதித் தேவைகளை பாதுகாக்க பயன்படுகிறது. Survival Benefits மூலம் வளரும் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    - திட்டம் எண். 932

    - UIN எண். 512N296V02

    - குறைந்தபட்ச வயது: 0 ஆண்டுகள்

    - அதிகபட்ச வயது: 12 ஆண்டுகள்

    - அடிப்படைத் தொகை: ரூ 1,00,000 முதல் வரம்பு இல்லை

    - அதிகபட்ச முதிர்வு வயது: 25

    எல்ஐசி-யின் பீமா ஸ்ரீ (LIC's Bima Shree):

    எல்ஐசி-யின் பீமா ஸ்ரீ திட்டம், குறைந்தபட்ச அடிப்படைத் தொகையான ரூ.10 லட்சம் குறிப்பாக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் இலக்கு பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    - திட்டம் எண்: 936

    - UIN எண். 512N316V02

    - பாலிசி காலம்: 14, 16, 18, 20 ஆண்டுகள்

    - குறைந்தபட்ச அடிப்படைத் தொகை: ரூ 10,00,000 முதல் வரம்பு இல்லை
    Published by:Selvi M
    First published:

    Tags: LIC, Life Insurance

    அடுத்த செய்தி