Home /News /business /

2022-2023 நிதியாண்டில் வரியை சேமிப்பதற்கு சாதுர்யமான 5 வழிகள் இதோ.!

2022-2023 நிதியாண்டில் வரியை சேமிப்பதற்கு சாதுர்யமான 5 வழிகள் இதோ.!

வரி

வரி

Income Tax | வரி செலுத்தும் நபர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரி கணக்கு தாக்கலில் நீங்கள் ஓராண்டில் ஈட்டிய வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரி விவரங்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் படி, சில வரி சலுகைகள், வரி விலக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வேறு வகைகளில் முதலீடுகள் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.

வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் :

வருமான வரிச் சட்டம் 80சி விதியின் கீழ் சில முதலீட்டுத் திட்டங்களில் சேருவதன் மூலமாக வரி விலக்கு பெற முடியும். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு கோர முடியும்.

1. பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (பிபிஎஃப்)
2. எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் (ஈபிஎஃப்)
3. ஈக்யூடி லிங்க்டு சேமிப்பு திட்டம் (இஎல்எஸ்எஸ்)
4. தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்)
5. சுகன்யா சம்ரிதி யோஜனா (எஸ்எஸ்ஒய்)
6. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்)
7. பிக்ஸட் டெபாசிட் - ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம்.



உங்களுக்கு தேவைப்பட்ட வரி பிரிவை தேர்வு செய்யவும் :

தற்போதைய சூழலில், நாட்டு மக்களுக்கு இரண்டு வகையான வரி சேவை பிரிவுகள் வழங்கப்படுகின்றன. ஐடிஆர் தாக்கல் செய்யும் போது நமக்கு தேவையான சரியான பிரிவை தேர்வு செய்தால் கூடுதலான வரி சலுகை பெற முடியும். பழைய வரி கணக்கு அல்லது புதிய வரி கணக்கு என இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Also Read : இந்த வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்களா.? வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாம் - எவ்வளவு தெரியுமா.?

மருத்துவக் காப்பீடு பெறலாம் :

உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக வரி சேமிப்பு பெற முடியும். 80டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீடு செய்ததற்காக ரூ.25 ஆயிரம் வரையில் வரிச் சலுகை பெற முடியும். இதே பிரிவில் மூத்த குடிமக்கள் ரூ.50 ஆயிரம் வரை வரி சலுகை பெறலாம்.



வீட்டுக் கடன் பலன்கள் :

நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் 80 சி பிரிவின் கீழ் வீட்டுக் கடன் மூலதன தொகையில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையில் வரி விலக்கு பெற முடியும். அதேபோன்று பிரிவு 24இன் கீழ் வட்டியில் ரூ.2 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.

Also Read : பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!

காலவரம்புக்குள் தாக்கல் செய்ய வேண்டும் :

வருமான வரித்துறை நிர்ணயித்துள்ள கால வரம்பின்படி ஆண்டுதோறும் ஜூலை 31ஆம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் அபராதம் மற்றும் இதர நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Income tax

அடுத்த செய்தி