முதல்முறையாக பணத்தை முதலீடு செய்யப் போறீங்களா? இதைப் படியுங்க..

முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் பிரபலமான சில முதலீட்டு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

முதல்முறையாக பணத்தை முதலீடு செய்யப் போறீங்களா? இதைப் படியுங்க..
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 12:53 PM IST
  • Share this:
பொதுவாக 'முதலீடு செய்தால் நல்ல பிரதிபலன் கிடைக்கும்' என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், எந்த நேரத்தில் எதில் முதலீடு செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. முதலீடு செய்வதற்கு முடிவெடுத்துவிட்டால் சந்தையில் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. எனவே, முதலீடு செய்வதற்கு முன்பு அதைப் பற்றிய நல்ல புரிதல் இருப்பது அவசியம். முதலீடு செய்வதற்கு பழைய நடைமுறைகள் பெரும்பாலும் ஒத்து வருவதில்லை. ஏனெனில் மாறி வரும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முதலீடுகளும், அவற்றின் பண்புகளும் மாறும். ஆகையால் முதலீடு செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் நல்ல ஆலோசகரை அணுகலாம்.

முதலீடு செய்பவர்கள் எப்போதும் ஏறுமுகத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அது மனித இயல்புதான் என்றாலும், அது சாத்தியமா என்றால் சாத்தியமே; ஆனால் அதற்கு முதலீடு பற்றிய தெளிவான புரிதல் இருப்பது தேவை.

முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் பின்வரும் பிரபலமான முதலீட்டு வழிகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.


மியூச்சுவல் ஃபண்ட் (MF)

முதலீடு செய்வதற்கு மிகவும் உகந்த ஒரு முறைதான் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் பண்ட் மேற்கொள்வதற்கு வயது, வருமானம் என எந்தத் தடையும் கிடையாது. இத்தோடு இதிலுள்ள ரிஸ்க்கை நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம். இதில் ஸ்டேபிள் கார்பஸ் மற்றும் லீகுய்ட் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலையான வைப்பு நிதி (FD)ஃபிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதி அனைவருக்குமான ஒரு பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். முதன்முறையாக முதலீடு செய்பவர்கள் நிச்சயம் ஃபிக்சட் டெபாசிட் செய்வது அவசியம் அதோடு அதற்கான சரியான கால அளவைத் தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீடு

பொதுவாக காப்பீட்டில் பல வகைகள் இருந்தாலும் சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு என இருவகைகளில்தான் அது அறியப்படுகிறது. ஒருவர் காப்பீட்டின் தொடக்க காலத்தில் குறைந்த பிரீமியத்தில் பாலிசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் முதலீட்டாளர்கள் எதிர்கால நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு காப்பீடுத் திட்டங்களை வாங்கலாம். யூனிட் லிங்க்ட் இன்சுரன்ஸ் பிளான் (ULIP) என்பது காப்பீடு மற்றும் முதலீடுகளை இணைக்கும் ஒரு வகையான ஆயுள் காப்பீடுத் திட்டமாகும். செலுத்துகிற பிரீமியத்தின் ஒரு பகுதியை அந்த நபர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்திற்கு இதன் வட்டி அளிக்கப்படும்.Also read: பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

பங்குச்சந்தை முதலீடு

நீண்ட காலத்திற்கு அதிகமான வருமானங்களை ஈர்க்கக்கூடிய முதலீடுகளை எதிர்பார்ப்பவர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம். தெளிவான ஆலோசனை பெற்று இந்த முதலீட்டை எடுப்பது முக்கியம். சந்தை நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த முதலீட்டை எடுக்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் இந்தியாவில் ஒரு தபால் அலுவலக சேமிப்பு திட்டமாக இருக்கிறது. வரிச் சலுகைகள், டெபாசிட் செய்த பணத்தில் நிலையான வட்டி போன்ற நன்மைகளை இது வழங்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வழியாக உள்ளது. ஏனெனில் இதில் ஆபத்து மிகக் குறைவு.

முதலீட்டாளர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த துறை சார் வல்லுநரை அணுகி மேலும் தெளிவு பெற்றுக்கொள்வது அவசியம்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading