Home /News /business /

குடும்பத்திற்காக ஒரு நல்ல பாலிசியை தேடுகிறீர்களா? இதை கொஞ்சம் பாருங்க!

குடும்பத்திற்காக ஒரு நல்ல பாலிசியை தேடுகிறீர்களா? இதை கொஞ்சம் பாருங்க!

பாலிசி

பாலிசி

பாலிசிதாரர்கள் எந்தவித நோயும் இல்லாமல் நலமாக இருக்கும்பட்சத்தில் 100 சதவீதம் வரையில் ரிட்டன்ஸ் பெறலாம்.

    ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஆதித்யா பிர்லா ஹெல்த் கேர் நிறுவனம் சார்பில், ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் - ப்ரீமியர் என்ற பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இது இழப்பீடு மற்றும் நிலையான பலன்களை கொண்ட பாலிசி ஆகும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் முழுமையான மருத்துவக் காப்பீடு வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் ப்ரீமியர் பாலிசி மூலமாக வெளிநாடுகளில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறவும், மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கும் காப்பீடு பெறலாம். இது மட்டுமல்லாமல் பயணம் கட்டணம், தங்குமிட செலவு மற்றும் விசா உதவி போன்ற சேவைகளையும் பெற முடியும்.

    இதையும் படிங்க.. boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

    மருத்துவத்தில் மிக, மிக அதிநவீன சிகிச்சைகளாக கருதப்படும் சைபர் நைஃப், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், லேசர் தெரபி, பேரியாட்ரிக் சர்ஜரி ஆகிய சிகிச்சைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற முடியும் என்று ஆதித்யா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மயாங்க் பாத்வல் கூறுகையில், “வெளிநாடுகளில் 16 வகையான பெரும் சிகிச்சைகளை பெறுவதற்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். சர்வதேச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் மட்டுமின்றி, டிஸ்ஜார்ஜுக்கு பிந்தைய மருத்துவ செலவுகள், ஆன்லைன் ஆலோசனை, நாடு திரும்புவது மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வருவது போன்ற சேவைகளை பெற முடியும்.

    இதையும் படிங்க... அவசியமான தகவல்.. பிரபல வங்கிகளில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான மாற்றங்கள்!

    பயண கட்டணம், நோயாளிக்கான தங்குமிடம், நோயாளியின் உதவியாளர் ஆகியோரின் பயணங்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஓராண்டு முடிந்த பாலிசிதாரர்களுக்கு காப்பீடு அளிக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாலிசி பலன்கள்

    * பாலிசிதாரர்கள் எந்தவித நோயும் இல்லாமல் நலமாக இருக்கும்பட்சத்தில் 100 சதவீதம் வரையில்  ரிட்டன்ஸ் பெற்று, அடுத்த ஆண்டின் ப்ரீமியம் கட்டணத்தில் அதனை கழித்துக் கொள்ளலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
    * தனி விபத்து மற்றும் மிக தீவிரமான நோய்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில நகரங்களில் வீட்டில் இருந்தபடியே கேஷ்லெஸ் சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
    * பாலிசியில் முதலீடு செய்த பிறகு, உங்களுக்கு நீண்டகால நோய் பாதிப்பு ஏற்பட்டால், நீண்டகால நோய் மேலாண்மை திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
    * மருத்துவ ரீதியாக, ஊட்டச்சத்து தொடர்பாக, மனநலன் தொடர்பாக ஆலோசனைகளை பெற முடியும். ஹோமியோபதி சிகிச்சை குறித்து ஃபோன் மூலமாக ஆலோசனைகளை பெறலாம்.
    * வெளிநாடுகளில் 16 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரையில் காப்பீடு பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Monetory Policy

    அடுத்த செய்தி