ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த 3 விஷயங்களை மட்டும் மறந்து விடாதீர்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த 3 விஷயங்களை மட்டும் மறந்து விடாதீர்கள்!

இன்சூரன்ஸ் திட்டம்

இன்சூரன்ஸ் திட்டம்

மூத்த குடிமக்களின் பெயரில் எடுக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலான கவரேஜை மட்டுமே வழங்குகின்றன

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கொரோனா பெருந்தோற்று பரவலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் நோய் தாக்கத்திற்குள்ளாகும் வாய்ப்பு அதிகமிருப்பதால், சிகிச்சை, மருந்துகள், செவிலியர் கட்டணம் போன்ற மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கிறது. பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், வட்டி உயர்வு, வேலையில்லா திட்டம் என தற்போதைய சூழ்நிலை நிலையற்றதாக இருப்பதால், எதிர்பாராத சமயத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கியமானதாகும்.

  அதிலும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முழு மெடிக்கல பில்லையும் இன்சூரன்ஸ் மூலம் கவர் செய்ய இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். ஒருவேளை வயதானவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டியிருந்தால், அவர்களுடைய வயது மற்றும் நோய்களைப் பொறுத்து இன்சூரன்ஸ் பீரியம் அதிகரிக்கூடும்.

  இனி பணம் அனுப்புவது ஈஸி... வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்குவது?

  மேலும் வயதானவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் புதிய நோய்களால் அல்லது ஏற்கனவே உள்ள நோயின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படலாம் என்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் அதிக கவரேஜ் வழங்க முன்வருவதில்லை. நீங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்...

  1. கவரேஜ் தொகை:

  வயதானவர்களுக்கு நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூத்த குடிமக்களின் பெயரில் எடுக்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலான கவரேஜை மட்டுமே வழங்குகின்றன. மற்றொருபுறம் அதிக பீரியம் செலுத்துவதற்கான திறன் மற்றும் குறைவான வயதுள்ள முதியவர்களுக்கு அதிகப்பட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வாழ்நாள் ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீடு கிடைக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவர ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குள் நிகழும் போட்டியைப் பயன்படுத்தி, அதிக கவரேஜ் தரக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யலாம்.

  2. இணை கட்டணம்:

  மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், விலை உயர்ந்த மருத்துவச் செலவுகளாக இருக்கலாம் என்பதால் பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோ-பேமெண்ட் எனப்படும் இணை கட்டண முறையை பின்பற்றுகின்றன. இதன் மூலம் மருத்துவ செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரர் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் முதியவர்கள் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். இதில் சில ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது பாலிசிதாரர்களுக்கான இணை கட்டண சதவீதத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கிறது. எனவே குறைந்த கோ-பேமெண்ட் செலுத்தக்கூடிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யவது நல்லது.

  அவசர தேவைக்கு கடன் வாங்கலாமா? சொத்துக்களை விற்கலாமா? விரிவான அலசல்!

  3. வரம்புகள்:

  இன்சூரன்ஸ் நிறுவனங்களிடையே கேப்பிங் எனப்படுவது அந்நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு விதித்துள்ள வரம்புகளை குறிக்கிறது. அதாவது வயதானவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை அறை வாடகை, மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடையாது என வரம்புகள் விதிக்கப்படும். சில சமயங்களில் முதியவர்களின் வயதைப் பொறுத்து கூடுதல் வரம்புகளைக் கூட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விதிக்கலாம். இதனால் வயதான நபர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும், அதற்கான பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகலாம். எனவே வயதான நபர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் இல்லாத ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Health, Insurance, Life Insurance