ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது இவ்வளவு நல்லதா! இத்தனை நாள் தெரியாமா போச்சே

ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது இவ்வளவு நல்லதா! இத்தனை நாள் தெரியாமா போச்சே

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அதிக மருத்துவச் செலவுகளுக்கான கவரேஜை நமக்கு தருகின்றன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெருந்தொற்றுக்கு பிறகு ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள போதிலும், நம்மில் சிலர் இதன் முக்கியத்துவத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆண்டுதோறும் சராசரியாக 20%-க்கும் மேலாக சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

  மருத்துவ செலவுகள் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் பல நேரங்களில் மருத்துவ செலவு என்பது பலருக்கும் கட்டுப்படியாகாத ஒன்றாக இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அடிப்படை மருத்துவ தேவைகளை கூட செய்து கொள்ள முடியாத நிலைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் சுகாதார செலவினங்களை திறம்பட எதிர்கொள்ள நல்ல வழி உள்ளது. தகுந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிளானை தேர்வு செய்வதன் மூலம் அதிகரித்த மருத்துவ செலவுகளை நம்மால் சமாளிக்க முடியும்.

  ஹோம் லோன் வாங்கும் ஐடியா இருக்கா? பிரபல வங்கி தரும் இந்த ஆஃபரை யூஸ் பண்ணிக்கோங்க!

  பொதுவாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அதிக மருத்துவச் செலவுகளுக்கான கவரேஜை நமக்கு தருகின்றன. எனவே மருத்துவ காரணங்களுக்காக தனி பிளான் உருவாக்குவது அவசியமாகிறது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் உதவுகின்றன. எனவே உங்களது நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெல்த் இன்ஷூரன்ஸை நீங்கள் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள் இங்கே...

  எமெர்ஜென்சி சூழலை கையாள உதவும்...

  எப்போதுமே வாழ்க்கை நம் கையில் இல்லை, எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்பதால் பர்சனல் ஆக்ஸிடன்ட் கவரேஜ் பாலிசியை ஒருவர் எடுக்க கருத்தில் கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். விபத்துகள் எதிர்பாராத நேரத்தில் நடக்க கூடியவை என்பதால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இதுபோன்ற கடினமான தருணங்களில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை ஈடு செய்யும். சரியான கவரேஜுடன் கூடிய மெடிக்கல் இன்ஷூரன்ஸ் நெருக்கடி நேரத்தை சமாளிக்க உதவும்.

  ஓய்வுக்கு பிறகான அவசர செலவு..

  பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒருவர் தனது மருத்துவ செலவுகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான மற்றும் மனஅழுத்தத்தை உண்டாக கூடிய விஷயமாக அமைகிறது. ஓய்வுக்கு பிறகான வாழ்க்கையை மிகவும் நிம்மதியாக மற்றும் மகிழ்ச்சியாக மாற்றவே அனைவரும் விரும்புவார்கள். இதற்கு இடையூறாக அவசரகால மருத்துவ செலவுகள் இருக்க கூடாது. எனவே ஒருவர் தனது ரிடையர்மென்ட் வாழ்க்கை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜை பெறுவது தான்.

  மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு உடனே ஓகே ஆகும் பர்சனல் லோன்! என்ன காரணம் தெரியுமா?

  வரி சேமிப்பு:

  தனிநபருக்கு வரிகள் ஒரு பெரிய சுமையாக இருக்க கூடும். எனவே பெரும்பாலானோர் வரிவிலக்கு பெறுவதற்கான பல வழிகளை பார்க்கிறார்கள். செக்ஷன் 80D இன் கீழ் மருத்துவக் காப்பீட்டை வரி விலக்கு முதலீடாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். வரி விலக்கின் மூலம் சேமிக்கும் பணத்தை மற்ற அத்தியாவசிய செலவுகளுக்காக பயன்படுத்தலாம்.

  சேமிப்பை பாதுகாக்கும்:

  மருத்துவ பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் மருத்துவ காரணங்களுக்காக பிரத்தியேக நிதியை உருவாக்குவது அவசியம். நீங்கள் செலவழிக்காத பணத்தை சேமித்து அதை ஒருகட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால் சேமித்த பணம் முழுவதையும் மருத்துவ செலவுகளுக்காக செலவு செய்வதென்பது விவேகமான செயலாக இருக்காது. இதற்கு சரியான வழி ஹெல்த் இன்ஷூரன்ஸ். உங்கள் சேமிப்பை முழுவதும் கரைக்காமல் அதே நேரம் அவசர மருத்துவ செலவுகளை எளிதாக சமாளிக்க உதவுகின்றன ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிளான்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Insurance, Medical Emergency, Savings