Home /News /business /

ரூ.1 கோடி வரையிலான ஹெல்த் கவரேஜ் யாரெல்லாம் எடுக்கலாம்.? நிபுணரின் பதில்.! 

ரூ.1 கோடி வரையிலான ஹெல்த் கவரேஜ் யாரெல்லாம் எடுக்கலாம்.? நிபுணரின் பதில்.! 

காட்சி படம்

காட்சி படம்

Health Insurance | நாளுக்கு நாள் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், கோவிட் தொற்றுக்கு பிறகு ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என பெரும்பாலான மக்கள் நினைக்க துவங்கி உள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இத்தனை நாள் எதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்று நினைத்து அதன் பக்கம் போகாமல் இருந்த பலரும், இன்று பாலிசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் பலர் திடீரென்று ஏற்படும் மெடிக்கல் எமெர்ஜென்சியை எதிர்கொள்வதற்கு தேவையான சரியான அளவு காப்பீடு எது என்பதை தீர்மானிப்பதில் சறுக்கி விடுகின்றனர். தற்போது மார்க்கெட்டில் ரூ.1 கோடி வரை கூட ஹெல்த் கவரேஜ் வழங்கும் பல பாலிசிகள் இருக்கின்றன. ஆனால் உண்மையில் இவ்வளவு பெரிய அமவுண்ட் கொண்ட பாலிசி ஒருவருக்கு தேவையா என்ற கேள்வி வருகிறது.

இது பற்றி கூறும் நிபுணர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரூ.1 கோடி காப்பீடு தேவைப்படாது. ஆனால் தீவிர நோய் வரலாறு கொண்ட குடும்பங்களுக்கு இத்தகைய பெரிய அமவுண்ட் கவரேஜ் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறர்கள். டிஜிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் அன்ட் டிராவல் செக்ஷன் தலைவர் சுதா ரெட்டி கூறுகையில், நாட்டில் மருத்துவ பணவீக்கம் (medical inflation rate) இரட்டை இலக்கமாக உள்ளது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு நீண்ட கால ப்ராடக்ட் என்பதால், ரூ.1 கோடி வரையிலான ஹெல்த் கவரேஜ் எடுப்பதை கருத்தில் கொள்ளலாம். குறிப்பாக உங்கள் குடும்பத்தில் தீவிர நோய் வரலாறு இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் பேசிய சுதா ரெட்டி கேன்சர் சிகிச்சைகள் அல்லது சிறுநீரகம் அல்லது இதயம் போன்ற முக்கிய உறுப்பு மாற்று சிகிச்சைக்கான செலவுகள் மெட்ரோ நகரங்களில் ரூ.10-40 லட்சம் வரை இருக்கும். அதிகரித்த மருத்துவ செலவுகள் காரணமாக ரூ.1 கோடி வரையிலான ஹெல்த் இன்ஷூரன்ஸை தேர்வு செய்யலாம். எனினும் இதற்கான பிரீமியங்கள் மிக அதிகமாக இருக்கலாம் என்பதால், ஒருவருக்கு அதை செலுத்தும் திறன் இருந்தால் மட்டுமே அது போன்ற பாலிசிகளை வாங்கலாம் என்றார். சில பொதுவான கேள்விகளும், சுதா ரெட்டியின் பதில்களும்...குறைந்த தொகை கொண்ட இன்ஷூரன்ஸ் ஏன் போதுமானதாக இருக்காது.?

தனிநபர் என்னும் போது ரூ. 5 லட்சம் - ரூ.10 லட்சம் வரையிலான குறைந்த காப்பீட்டுத் தொகை போதுமானது, ஆனால் ஒரு முழு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது. தீவிர நோய்க்கான சிகிச்சைச் செலவுகளும் மிக அதிகம். அதே போல ஒரே ஆண்டில் பலமுறை ஹாஸ்பிடல் செலவுகள் செய்ய நேரிடலாம். இதுபோன்ற நேரத்தில் குறைந்த காப்பீட்டுத் தொகை நிச்சயம் சிறந்த ஒன்றாக இருக்காது. சில மருத்துவ நிலைமைகளுக்கு முக்கிய சிகிச்சைக்கு பிறகான நீண்ட கால பராமரிப்பு செலவுகள் இருக்கும். இதுபோன்ற சூழலில் அதிக காப்பீட்டு தொகை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனினும் பிரீமியங்கள் அதிகம் என்பதால் அதை தங்களால் செலுத்த முடியுமா என்பதை ஒருவர் மதிப்பிட வேண்டும்.

Also Read : பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!

ரூ.1 கோடி காப்பீடு ஒருவரால் வாங்க முடியவில்லை என்றால்.?

பிரீமியம் அதிகம் என்பதால் அனைவராலும் ரூ.1 கோடிக்கான இன்ஷூரன்ஸ் வாங்க முடியாது என்பதால், ஒரு குழந்தையுடன் இருக்கும் இளம் தம்பதி ரூ.30 - ரூ.40 லட்சம் கவரேஜுடன் தங்கள் பாலிசியை தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் கவரேஜை படிப்படியாக அதிகரிக்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் ஒட்டுமொத்த போனஸ், ஒவ்வொரு உரிமைகோரப்படாத ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதிக அளவு பாலிசி சிறந்த கவரேஜ்களை கிடைக்க செய்யுமா.?

ஒரு சில குறிப்பிட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக காப்பீட்டு தொகையைத் தேர்வு செய்தாலும் கவரேஜ் விதிமுறைகள் பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். எனவே பாலிசி விதிமுறைகளை கவனமாக படித்து வெயிட்டிங் பீரியட்ஸ், பல நோய் நிலைகள் அல்லது ரூம் ரென்ட் லெவல் கேப்பிங் கோ-பே டெர்ம்ஸ் போன்றவற்றை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

Also Read : கொரோனவிற்கு பின் இந்தியாவில் அதிகம் கவனம் ஈர்த்த லைஃப் இன்ஷூரன்ஸ் பிளான்!

நான் ரூ.1 கோடி ஹெல்த் பிளான் எடுத்தால் அது என் குடும்பத்திற்கும் கவர் ஆகுமா.?

ஒருவர் Family Floater Plan-ஐ தேர்வு செய்தால் தன் முழு குடும்பத்தையும் ஒரே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இன்ஷூர் செய்யலாம். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பாலிசி எடுக்க விரும்பினால் பிரீமியம் அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கென்று தனி பாலிசி எடுப்பதை கருத்தில் கொள்ளலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Health, Life Insurance

அடுத்த செய்தி