Home /News /business /

சுகர் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இனி மருத்துவ காப்பீடு.. செலவு குறைய போகுது!

சுகர் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இனி மருத்துவ காப்பீடு.. செலவு குறைய போகுது!

மருத்து காப்பீடு

மருத்து காப்பீடு

நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்ஷன் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது.

    பொதுவாக உடல் நலக் காப்பீடு அல்லது மருத்துவக் காப்பீடு வாங்கும் போது, நாட்பட்ட நோய்கள், உடல் நலக்குறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வயது, உடல் ஆரோக்கியம், ஆகியவை முக்கிய காரணிகளாக கணக்கிடப்பட்டு, காப்பீட்டின் தொகை, ப்ரீமியம் தொகை ஆகியவை நிர்ணயிக்கப்படும். ஒரு சில நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு வழியாக சிகிச்சை பெறுவதற்காக கிரிட்டிக்கல் இல்நஸ் பாலிசியும் எடுக்கலாம்.

    பெரிய தொகையை அறுவை சிகிச்சை, நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை, மருத்துவ செலவுகளுக்காக செலவிட முடியாத நேரத்தில், மருத்துவக் காப்பீடு கைகொடுக்கும். பல காப்பீட்டு நிறுவனங்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால், என்று ஒரு சில குறிப்பிட்ட குறைபாடுகள் இருந்தால் காப்பீடு வழங்காது அல்லது அதிக ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டியது வரும். ஆனால், தற்போது, நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்ஷன் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது.

    நிவா பூபா நிறுவனத்தின் புதிய உடல்நலக் காப்பீடு

    நிவா பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நீரிழிவு மற்றும் ஹைப்பர்டென்ஷன் (அதிக ரத்த அழுத்தம்) பாதிப்பு இருப்பவர்களுக்கு ஸ்மார்ட் ஹெல்த் + டிஸீஸ் மேனேஜ்மென்ட் என்ற புதிய ரைடர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், காப்பீடு பெற்ற முதல் நாளில் இருந்தே, நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதிக நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதால், அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்!

    மேக்ஸ் பூபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தான் தற்போது நிவா பூபா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நிறுவனம் அளித்த அறிக்கையில், “இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் உடல் நலம் தீவிரமாக பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக இருப்பதால், உடனடியாக அவர்கள் சிகிச்சை பெற உதவும் வகையில் இந்த பாலிசியும் கவரேஜும் திட்டமிட்டுள்ளது” தெரிவித்திருந்தது.

    பாலிசியில் கூடுதல் தள்ளுபடிகள் மற்றும் நன்மைகள்

    எந்த காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினாலும், அதன் பலன் உடனடியாக தொடங்காது. பாலிசி வாங்கிய சில வாரங்கள் அல்லது குறைந்தது 6 மாதங்கள் கடந்த பின்பு தான் பாலிசியைப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த புதிய பாலிசியில் பாலிசி வாங்கிய அன்றே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நன்மை இருக்கிறது.

    கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

    எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவலை இன்றி வாழ்வதற்கு இந்த காப்பீடு பெரிய உதவியாக இருக்கும். இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யும் தேர்வையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்பவர்களுக்கு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால், பாலிசியை புதுப்பிக்கும் போது பிரீமியம் தொகையில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Diabetes, Insurance, Life Insurance

    அடுத்த செய்தி