ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீது குவியும் புகார்கள்! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீது குவியும் புகார்கள்! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்கள் க்ளெய்ம்களை நிராகரித்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. உங்கள் புகாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்கள் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கான அமைப்பானது கடந்த 2021-22ஆம் ஆண்டில் சுமார் 32 சதவீதத்திற்கும் அதிகமான புகார்களை தீர்க்க உதவியுள்ளது.

  2020-21-ஆம் ஆண்டில் பதிவான புகார்களுடன் ஒப்பிடும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிரான மேலும் பல புகார்களை இன்ஷூரன்ஸ் குறைதீர்ப்பாளர்கள் தீர்த்து வைத்து உள்ளனர். எனினும் மும்பையில் உள்ள Insurance Ombudsman அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாலிசிதாரர்களின் இன்ஷூரன்ஸ் தொடர்பான புகார்கள் முந்தைய ஆண்டை விட 2021-22ல் கிட்டத்தட்ட 34% உயர்ந்துள்ளது.

  மும்பையில் அமைந்துள்ள இந்த சென்டர் கடந்த 2019-20 காலகட்டத்தில் சுமார் 2,298 மற்றும் 2020-21 காலகட்டத்தில் சுமார் 2,448 ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான புகார்களை கையாண்டுள்ளது. எனினும் 2021-22 ஆம் ஆண்டிற்கான அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி 2021-22 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 3,276-ஆக அதிகரித்து உள்ளது.

  ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த 3 விஷயங்களை மட்டும் மறந்து விடாதீர்கள்!

  இந்த புகார்கள் பெருந்தொற்று பாதிப்பு க்ளெய்ம் அல்லது பாதிப்பற்ற க்ளெய்ம் என தனித்தனியாக பிரித்து பார்க்கப்படவில்லை என்றாலும், புகார்களின் எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு மும்பை மற்றும் நாட்டின் பல பகுதிகளில் டெல்டா மற்றும் ஓமைக்ரான் என கோவிட்-19 அலை உச்சத்தில் இருந்த போது பதிவாகி உள்ள காலத்துடன் ஒத்துள்ளது. மும்பை மற்றும் கோவாவிற்கான இன்ஷூரன்ஸ் குறைதீர்ப்பு அதிகாரியான பரத்குமார் பாண்டியா சமீபத்தில் பேசுகையில், பதிவாகிய பெரும்பாலான கோவிட்-19 தொடர்பான இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் புகார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தொடர்பானவை.

  நோயாளியின் உடல்நிலைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையில் க்ளெய்ம்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட கேஸ்களும் உள்ளன என்றார். சில சந்தர்ப்பங்களில், காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ரேட்-கார்டு பொருந்தாது என்றார். அரசால் விதிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சை கட்டணமானது காப்பீடு செய்யப்படாத நோயாளிகளுக்கு மட்டுமே என்ற மருத்துவமனைகளின் நிலைப்பாடு மருத்துவமனைகளுக்கும், காப்பீட்டாளர்களுக்கும் இடையே பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. இதனால் நோயாளியாக மாறிய பாலிசிதாரர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. ரூ.30 லட்சம் வரையிலான க்ளெய்ம்களை உள்ளடக்கிய புகார்களை Ombudsman அலுவலகங்கள் கையாளலாம்.

  சிறிய முதலீட்டில் பெரிய லாபம்! ரூ.5 லட்சம் முதலீடு செய்து மாதம் ரூ.60,000 வருமானம் பெறுங்கள்

  எனவே இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்கள் க்ளெய்ம்களை நிராகரித்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. உங்கள் புகாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதி 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். பின் முறையீட்டை Ombudsman அலுவலகம் கொண்டு சென்றால் அது 90 நாட்களுக்குள் குறையை தீர்க்க வேண்டும். எனவே காப்பீட்டு நிறுவனம் உங்கள் புகாரை நிராகரித்தாலோ, அதிருப்தி அடைந்தாலோ அல்லது 30 நாட்களாகியும் உங்கள் புகாருக்கு பதிலளிக்காமல் இருந்தாலோ நீங்கள் குறைதீர்ப்பாளரை அணுகலாம் என்றார் பாண்டியா.

  இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிறகு இன்ஷூரன்ஸ் குறைதீர்ப்பாளர் உத்தரவு பிறப்பிப்பார். தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால் பாலிசிதாரர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் குறிப்பிட்டார். மொத்தத்தில் கோவிட்-19 தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மீது பாலிசிதாரர்கள் அதிருப்தி அடைந்ததால் அதிக புகார்களை கையாண்டுள்ளதாக மும்பையில் உள்ள Insurance Ombudsman அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Health Checkup, Insurance