ஹோம் /நியூஸ் /வணிகம் /

60 வயதில் மருத்துவ காப்பீடு எடுக்கும்போது நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டிய 5 விஷயங்கள்.!

60 வயதில் மருத்துவ காப்பீடு எடுக்கும்போது நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டிய 5 விஷயங்கள்.!

மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு

Health Insurance | உடல் ஆரோக்கியம் சிக்கலுக்கு உள்ளாகும் முதிய வயதில் தான் நமக்கு காப்பீடு அவசியம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், காப்பீடு எடுக்கும்போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் ஓய்வுபெறும் வரையிலும் நமக்கு கவலையில்லை. நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பிலேயே மருத்துவக் காப்பீடு வழங்கி விடுவார்கள். ஆனால், நாம் ஓய்வுபெற்ற உடனே அவர்களது பாலிசி எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். நாம் மருத்துவக் காப்பீடு அற்ற நபராக மாறிவிடுவோம்.

இந்த சமயத்தில் பிற செலவுகள் சேர்ந்து கொள்வதால் பலர் மருத்துவக் காப்பீடு எடுக்க தாமதம் செய்கின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியம் சிக்கலுக்கு உள்ளாகும் இந்த வயதில் தான் நமக்கு காப்பீடு அவசியம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், காப்பீடு எடுக்கும்போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரியான தகவலை வழங்குவது

மருத்துவ காப்பீட்டுக்கான முன்மொழிவு படிவத்தை நிரப்பும்போது சரியான தகவல்களை நாம் நிரப்ப வேண்டும். ஏற்கனவே உள்ள நோய்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். புகைப் பழக்கம், மது பழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால், உங்களுக்கு காப்பீடு கிளைம் கோரும்போது நம்பிக்கையை மீறி விட்டீர்கள் என்ற அடிப்படையில் உங்களுக்கான காப்பீடு பணம் மறுக்கப்படலாம்.

காத்திருப்பு காலம்

உங்களுக்கு 60 வயது நிரம்பும்போது ஏற்கனவே சில நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது தெரிவிக்கப்படும் காத்திருப்பு காலம் முடிவடைந்த பிறகு தான் இந்த நோய்களுக்கு காப்பீடு பெற முடியும். இந்த காத்திருப்பு காலம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாறுபடும். இந்த காத்திருப்பு காலம் என்பது ஓராண்டு முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கலாம். குறைவான காத்திருப்பு காலம் கொண்ட நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும்.

Also Read : மன நலப் பிரச்சனைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவரேஜ் உண்டா? விடை இங்கே!

ஆயுஷ் மருத்துவம்

ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவங்களை உள்ளடக்கியதே ஆயுஷ் மருத்துவம் ஆகும். அலோபதி மருத்துவம் வேண்டாம் என்று நீங்கள் ஆயுஷ் மருத்துவத்தை நாடினாலும், சில நிறுவனங்கள் அதற்கும் காப்பீடு தருகின்றன. ஆயுஷ் மருத்துவத்திற்கு அதிக காப்பீடு தரும் நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

சரியான ரைடர் தேர்வு

உங்கள் மருத்துவக் காப்பீட்டில் வழங்கப்படும் அடிப்படை வசதிகளை தவிர்த்து, கூடுதலான வசதிகள் தேவைப்பட்டால் அதற்கு சரியான ரைடர்களை தேர்வு செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு ரூம் வாடகைக்கான உச்ச வரம்புகள், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலத்தில் இருந்து விலக்கு போன்ற ரைடர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

டாப் அப், சூப்பர் டாப் அப்

அடிப்படை மருத்துவக் காப்பீட்டில் நீங்கள் சிகிச்சை பெற்று முடித்து விட்டீர்கள் என்றால், அதற்கு அடுத்து வரும் செலவுகளுக்கு சிக்கல் ஏற்படும். குறிப்பாக விண்ணை முட்டும் அளவுக்கு மருத்துவச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், டாப் அப், சூப்பர் டாப் அப் செய்து வைத்திருந்தால் அது அவசர காலத்தில் உதவக் கூடும்.

Published by:Selvi M
First published:

Tags: Insurance, Tamil News