Home /News /business /

வங்கி ஹெல்த் கிரெடிட் கார்டுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா, விண்ணப்பிப்பது எப்படி?

வங்கி ஹெல்த் கிரெடிட் கார்டுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா, விண்ணப்பிப்பது எப்படி?

ஹெல்த் கிரெடிட் கார்டு

ஹெல்த் கிரெடிட் கார்டு

Health credit cards : மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் சேர்ந்து கடந்த 2021 மார்ச் மாதம் முதல் மெடிக்கல் கிரெடிட் கார்டு திட்டத்தை யெஸ் பேங்க் செயல்படுத்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலம் என்பது ஒவ்வொருவர் மனதில் உடல் நலன் குறித்த சிந்தனையை தூண்டியுள்ளது. மக்கள் தங்களுடைய மற்றும் தாங்கள் சார்ந்தவர்களின் உடல் நலன் குறித்து மிகுந்த கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து மருத்துவம் மற்றும் உடல் நலனை தக்க வைத்துக் கொள்வது தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளன. இதை மனதில் கொண்டு, பல்வேறு வங்கிகள் சார்பில் ஹெல்த் மற்றும் வெல்னஸ் கிரெடிட் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அட்டைகளை பெறுவதற்கு, நீங்கள் வருடாந்திர சேவை கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது எந்தெந்த வங்கி அட்டைகளை வழங்குகிறது, எவ்வளவு கட்டணம் என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

யெஸ் பேங்க் அட்டை : 

மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் சேர்ந்து கடந்த 2021 மார்ச் மாதம் முதல் மெடிக்கல் கிரெடிட் கார்டு திட்டத்தை யெஸ் பேங்க் செயல்படுத்து வருகிறது. இதில் காம்பிளிமென்ட்ரி சலுகையாக வருடாந்திர முன் தடுப்பு மருத்துவ பரிசோதனைகள், உடல் பிட்னஸ் ஆலோசனைகள், மருந்துக் கடைகளில் செலவிடும் பணத்துக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : மாற்றுத் திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சலுகை.. முழு விவரம்!

எஸ்பிஐ அட்டை : 

எஸ்பிஐ வங்கி சார்பில் பிட்பாஸ் என்ற பெயரில் வருடாந்திர மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. இதில் இணைபவர்கள் ஆன்லைன் மூலமாக டாக்டர்களிடம் எண்ணற்ற முறை ஆலோசனைகளை பெறலாம். ஆண்டுதோறும் அடிப்படையான மருத்துவ பரிசோதனைகள் உண்டு. மருந்துக் கடைகளில் செலுத்தும் பணத்துக்கு 5 எக்ஸ் ரிவார்ட் பாயிண்ட்ஸ் உண்டு.

ஆக்சிஸ் அட்டை : 

இதேபோன்று ஆக்சிஸ் வங்கி சார்பிலும், ஆண்டு முழுவதிலும் ஆன்லைன் மூலமாக டாக்டர்களிடம் எண்ணற்ற முறை ஆலோசனைகளை பெறலாம். உடல் பிட்னஸ் குறித்து ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மருத்துவ பரிசோதனைக்கு ரூ.500 வரை தள்ளுபடி உண்டு.

இதையும் படியுங்கள் : உங்கள் குழந்தைகளுக்கு அவசியம் கற்று தர வேண்டிய நிதி மேலாண்மை திறன்கள்!

இதுகுறித்து எஸ்பிஐ கார்டு திட்டத்தின் மேலாண் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான ராம மோகன் ராவ் அமரா கூறுகையில், “எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தும் மக்களில் ஏராளமானோர் இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பரிசோதனைக்கான செலவுகளை ச்ய்துள்ளன. ஆகவே, மருத்துவம் தொடர்பான பெரிய செலவுகளை செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

பலன்கள் : 

மருத்துவ பயன்பாட்டுக்கு கிரெடிட் அட்டை பெற்றவர்கள், இதனை மருத்துவ பரிசோதனை மற்றும் ஜிம் கட்டணம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஷாப்பிங், டிராவல் போன்ற விஷயங்களுக்கு இதனை பயன்படுத்த முடியாது. அதேசமயம், பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற சேவைகளுக்கு, மக்கள் தங்களுக்கு வாடிக்கையான மருத்துவர்களையே அதிகம் அணுகி வருகின்றனர். இதனால், ஆன்லைன் வாயிலாக புதிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்று சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Credit Card, Yes Bank

அடுத்த செய்தி