முகப்பு /செய்தி /வணிகம் / விற்பனைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் அலுவலகம்!

விற்பனைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் அலுவலகம்!

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமாக மும்பையில் உள்ள பாந்ரா குர்லா காப்ளக்ஸ் அலுவலகத்தை எச்டிஎப்சி நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நிதி சிக்கலில் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலகங்களை விற்கும் வேலையில் எச்டிஎப்சி நிதி நிறுவனம் இறங்கியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமாக மும்பையில் உள்ள பாந்ரா குர்லா காப்ளக்ஸ் அலுவலகத்தை எச்டிஎப்சி நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்தது.

விமான சேவையைத் தொடர்ந்து அளிக்க முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ள நிலையில், எச்டிஎப்சிக்கு 414.80 கோடி ரூபாயை திருப்பி அளிக்க முடியாத சூழலில் உள்ளது.

இந்நிலையில் அந்த அலுவலகத்தை 245 கோடி ரூபாய்க்கு மே 15-ம் தேதி விற்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 120 விமானங்களுடன் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ், நிதி சிக்கலால் ஏப்ரல் மாதம் முதல் தற்காலிகமாகச் சேவையை நிறுத்தியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவாலாவதிலிருந்து மீட்கும் பொறுப்பை ஏற்றுள்ள எஸ்பிஐ, நிதி சிக்கலுக்குத் தீர்வு கண்ட பிறகு விற்றுவிடமுடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பார்க்க:

First published:

Tags: Jet Airways