வீட்டுக்கடன் வட்டி விகிதத்தைக் குறைத்த HDFC வங்கி.. இன்று முதல் அமலாகிறது..

வீடு லோன்

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வசதியை இந்த வங்கி அறிவித்துள்ளது |

 • Share this:
  இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HDFC வீட்டுக் கடன் வாங்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைப்பதாகவும், வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

  இந்த கடன் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகின்றது. சிபில் எண்ணிக்கை முறையாக வைத்திருக்கும் நபர்கள் இந்த வட்டிக் குறைப்பின் மூலம் கடன் பெற வாய்ப்பாக அமையும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. HDFC வங்கியைத் தொடர்ந்து கோடாக் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.65 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதம் மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும். முன்னதாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க.. Whatsapp-க்கு மாற்றாக ஹைடெக் செயலி அறிமுகம்.. திருவண்ணாமலையில் 8-ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் உருவாக்கம்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: