Home /News /business /

எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி  வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு : வீட்டுக் கடன் வசதி அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவின் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும்  நிறுவனமான எச்டிஎஃப்சி , தனது துணை நிறுவனமான எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய முடிவெடுத்துள்ளது.

இந்த இணைப்பு குறித்து அதன் தலைவர் தீபக் பரேக்  கூறுகையில், " ரியல் எஸ்டெட் ஒழுங்குமுறை சட்டத்தின் அமலாக்கம், வீட்டுவசதித் துறைகளுக்கு வழங்கப்பட்ட கட்டமைப்பு அந்தஸ்து (Infrastructure Status),அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டங்கள் போன்ற அரசின் தொடர்ச்சியாக நடவடிக்கையின் காரணமாக வீட்டு துறையில் பன்முக வளர்ச்சி உருவாகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த இணைப்பு மூலம், தொழில் நிபுண முறையில் மிகப்பெரிய அளவில் வீட்டு நிதியை வழங்க முடியும் என்று தெரிவித்த அவர், " பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன்மூலம், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு செலவுகளுக்கு கடனுதவி செய்ய முடியும். மலிவான வீடுகள் வாங்க நினைபவர்களுக்கு ஆதரவளிக்க  முடியும்.  பொருளாதாரத்தில் கடன் விகிதம் அதிகரிக்கும், ஏனெனில் விரைவான வளர்ச்சிக்கு, அமைப்பு ரீதியான கடன் வழங்குதலும் முக்கியம். முன்னுரிமைத் துறையாக  விளங்கும்  விவசாயத்துக்கு அதிக கடன் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க முடியும்" என்று தெரிவத்தார்.

தீபக் பரேக்


துணைத் தலைவர் கேகி மிஸ்திரி இதுகுறித்து கூறுகையில், "இந்த இணைப்பு  முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வருகை அதிகரிக்கும்.  உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு எச்டிஎப்சியின் தரம் உயர உதவும். உலக அளவில் போட்டியிட முடியும். இணைப்புக்குப் பிறகு வங்கியின் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியும். உலகளவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக புத்துயிர் பெறும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, 10 ஆண்டுகள் நிறைவுபெற்று , 50,000 கோடிகளுக்கு மேல் சொத்து மதிப்புள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Institution) வங்கியாக தன்னை மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான எப்டிஎப்சி, தனது துணை நிறுவனமான எப்டிஎப்சி வங்கியுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டுள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Bank, HDFC, HDFC Bank

அடுத்த செய்தி