Home /News /business /

HDFC வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடங்கினால் லாபம் நிச்சயம்.. ஏன் தெரியுமா?

HDFC வங்கியில் பிக்சட் டெபாசிட் தொடங்கினால் லாபம் நிச்சயம்.. ஏன் தெரியுமா?

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

HDFC வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் டிசம்பர் 1 முதல் வந்துள்ள மாற்றம்.

    HDFC வங்கி, சில குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

    முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. இந்த மாதம் டிசம்பர் 1 முதல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த வங்கி எச்.டி.எப்.சி தான். சில குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதாவது குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்காக வைக்கப்படும் பிக்சட் திட்டத்தில் வட்டித் தொகை மட்டுமே 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

    அதே போல் இந்த வங்கியில் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. டிசம்பர் 1 முதல் எச்.டி.எப்.சி வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி குறித்த முழு விபரம்.

    7 - 14 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 2.50%

    15 - 29 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 2.50%

    30 - 45 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 3%

    61 - 90 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 3%

    91 நாட்களிலிருந்து 6 மாதங்களுக்கான திட்டத்தின் வட்டி 3.5%

    1 வருட திட்டத்தின் வட்டி - 4.9%

    1 வருடம் முதல் - 2 வருடம் திட்டத்தின் வட்டி 5%

    2 வருடம் முதல் - 3 வருடம் திட்டத்தின் வட்டி 5.15%

    3 வருடம் முதல் - 5 வருடம் திட்டத்தின் வட்டி 5.35%

    5வருடம் முதல் - 10 வருடம் திட்டத்தின் வட்டி 5.50

    அதே போல் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட முதிர்ச்சி காலத்திற்கு முன்கூட்டியே கணக்கை மூடினால் அசல் தொகை ஒப்பந்தம் செய்யப்பட்ட தவணைக்கான விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும் அல்லது வங்கியில் டெபாசிட் அமலில் உள்ள தவணைக்காலத்திற்கான அடிப்படை விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும் .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Fixed Deposit, HDFC Bank

    அடுத்த செய்தி