HDFC ERGO ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘Pay as you Drive’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாகன இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் முன்கூட்டிய செலவுகளை குறைக்கும் வகையில், தொலைதூர அடிப்படையிலான காப்பீட்டை வழங்கும் காப்பீட்டுத் தீர்வாக குறிப்பிடப்படுகிறது.
Pay as you Drive இன்ஷூரன்ஸ் திட்டம் எதற்காக, அதன் பயன் என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம். நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இன்ஷூரன்ஸ் செய்வது கட்டாயமாக உள்ளது. இந்த விதியை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத்தை அரசு அதிகரித்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் 2019-ன் படி, உங்கள் இன்ஷூரன்ஸ் செய்யாத வாகனத்தை இயக்கினால் ரூ.2,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். டூவீலரை சகஜமாக பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும் அதை இன்ஷூரன்ஸ் செய்து விடுகின்றனர். ஆனால் கார்கள் இருந்து அதை அதிகம் பயன்படுத்தாதவர்கள் அதை இன்ஷூரன்ஸ் செய்ய தயங்குவார்கள்.
கார்களை அதிகம் பயன்படுத்தாததால் அதை இன்ஷூரன்ஸ் செய்ய தயங்கும் மக்களுக்காக மற்றும் பல கார்களை வைத்திருப்பவர்களுக்காகவே HDFC ERGO இந்த புதிய "Pay as you Drive" திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கார்களை குறைவாக பயன்படுத்துபவர்கள் அல்லது பல கார்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மிகவும் பொருத்தமானது. மே 14, 2022 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் புதிய மாருதி சுசுகி கார் உரிமையாளர்களுக்கு இந்த புதிய திட்டம் கிடைக்கும் என HDFC ERGO கூறி உள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள HDFC, இந்த புதிய திட்டம் ரெகுலேட்ரி சாண்ட்பாக்ஸின் கீழ், 10,000 பாலிசிகள் அல்லது ரூ.50 லட்சம் பிரீமியத்திற்கு பொருந்தும். மேலும் இது மாருதி சுசூகி இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் பிரைவேட் லிமிடெட் மூலம் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. பல வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை அடிக்கடி பயன்படுத்துவதில்லை மற்றும் தினசரி வாகனம் பயன்படுத்துபவர்கள் செலுத்தும் அதே இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை செலுத்துகின்றனர்.
ALSO READ | PF balance check : மொத்தம் 4 வழி இருக்கு.. பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!
எனவே எங்களது இந்த புதிய திட்டம் காரின் உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் பிரீமியம் செலுத்துவதற்கான வாய்ப்பை கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. HDFC ERGO ஜெனரல் இன்ஷூரன்ஸின் மோட்டார் பிசினஸ் தலைவர் பார்த்தனில் கோஷ் கூறுகையில், Pay as you Drive மூலம் வாடிக்கையாளர்களின் மறைந்திருக்கும் தேவையை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். கார் பயன்பாட்டின் அடிப்படையில் இன்ஷூரன்ஸில் சேமிப்பை வழங்குவதன் மூலம் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவில் ஒரு புதிய முன்னுரிமையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம் என்றார்.
பொதுவாக Pay as you Drive இன்ஷூரன்ஸ் எப்படி செயல்படுகிறது.?
இந்த
Pay as you Drive இன்ஷூரன்ஸ் பயன்பாட்டின் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்த வாடிகையாளர்களை அனுமதிக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் own damage (OD) பிரீமியத்தை
20% வரை குறைக்கலாம். இந்த இன்ஷூரன்ஸை எடுக்க நினைக்கும் கார் உரிமையாளர்கள் தங்களது காரில் ஒரு வருட காலத்திற்குள் பயணிக்க எதிர்பார்க்கும் கிலோ மீட்டர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதை தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.