ஹெச்.டி.எப்.சி வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஹெச்.டி.எப்.சி வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

HDFC

கொரோனா வைரஸ் பாதிப்பால் சொந்த வீடு கட்டும் முடிவை கைவிட்டவர்களுக்கு தற்போது பொன்னான வாய்ப்புகள் வந்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹோம் லோனுக்கான வட்டியில் 0.5 விழுக்காட்டை குறைப்பதாக தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி அறிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட சரிவுகளை ஈடுசெய்ய மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறைக்கு போதுமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாராக்கடன் பிரச்சனைகள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பதால், பாதுகாப்பான கடன் பிரிவாக கருதப்படும் வீட்டுக் கடன் பிரிவை ஊக்குவிக்க மத்திய அரசும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.

அந்த வகையில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் போட்டிப் போட்டுக்கொண்டு குறைத்து வருகின்றன. பொதுவாகப் பொதுத்துறை வங்கிகள் தான் குறைவான வட்டியில் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றைக் கொடுக்கும். ஆனால் தற்போது பொதுத்துறை வங்கியை விடவும் தனியார் வங்கி குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சொந்த வீடு கட்டும் முடிவை கைவிட்டவர்களுக்கு தற்போது பொன்னான வாய்ப்புகள் வந்துள்ளன. அதாவது, வீடு வாங்கவோ அல்லது கட்டவோ நீங்கள் திட்டமிட்டு இருந்தால் உங்களுக்கு இதுதான் சரியான நேரம். முதல் முறையாகச் சொந்த வீடு வாங்குவோருக்கு PMAY திட்டத்தின் கீழ் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, வீட்டுக்கடன் பிரிவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் வட்டியைக் குறைத்து வருகிறது.

இதனால் பிற தனியார் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. எஸ்பிஐ வங்கியில் தற்போது 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு 6.7 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. 6.7 சதவீத வட்டியில் எஸ்பிஐ வங்கி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு கடன் அளிக்கிறது, ஆனால் மற்றவர்களுக்கு 6.75 சதவீதம் என்ற துவக்க நிலையில் இருந்து வீட்டுக் கடன் அளிக்கிறது. மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமான எஸ்பிஐ வீட்டு கடனுக்கான processing கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது.

Also read... Gold Rate | சவரனுக்கு ரூ. 256 உயர்ந்தது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

அந்தவகையில் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சியும் வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைப்பதாகவும், வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட வட்டி விகிதம் மார்ச் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல, மார்ச் 31ஆம் தேதி வரையில் செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியைத் தொடர்ந்து கோடாக் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.65 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

சிறந்த கதைகள்