Home /News /business /

இந்த வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவரா நீங்கள்? இனி கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்!

இந்த வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவரா நீங்கள்? இனி கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்!

பேங்க் லோன்

பேங்க் லோன்

முன்னதாக, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்திடம் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் சார்பில்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் நீங்கள் வீட்டுக் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய செய்தி இது. இந்த வங்கி வழங்கும் முதன்மை சில்லறை கடன் விகிதம் (ஆர்பிஎல்ஆர்) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன்களுக்கான ஈஎம்ஐ தொகை அதிகரித்துள்ளது.

    புதிய வட்டி உயர்வு ஆகஸ்ட் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வெளியிட்டுள்ள செய்தியில், “வீட்டுக் கடன்களுக்கான ஆர்பிஎல்ஆர் விகிதத்தை ஹெச்டிஎஃப்சி உயர்த்துகிறது. இது மாற்றியமைக்கத்தக்க வீட்டு கடன் (ஏஆர்ஹெச்எல்) திட்டங்களுக்கு பொருந்தும். புதிய முடிவின்படி 25 அடிப்படை பாயிண்ட் உயர்த்தப்படுகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற வங்கிகளிலும் வட்டி விகிதம் உயர்வு

    முன்னதாக ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் அண்மையில் உயர்த்தப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெபோ ரேட் என்னும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

    Also Read : விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்.. விண்ணப்பிப்பது எப்படி?

    ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்க விண்ணப்பம்

    முன்னதாக, தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்திடம் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் சார்பில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் ஆகியவற்றை ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் இணைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தனியார் வங்கிகளிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ஹெச்டிஎஃப்சி செயல்பட்டு வருகிறது.

    மாதிரி படம்


    ரெபோ ரேட் உயர்வு

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் ஆய்வுக் கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 50 அடிப்படை பாயிண்ட் என்ற வகையில் அதிகரித்து 5.4 சதவீதமாக நிர்ணயம் செய்தது. அண்மைக் காலங்களில் ரெபோ ரேட் உயர்த்தப்படுவது இது 3ஆவது முறையாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் ரெபோ ரேட் விகிதம் 5.15 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 5.4 சதவீதமாக இருக்கிறது.

    முன்னதாக, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் அரையாண்டு ஆய்வுக் கூட்டம் கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது ரெபோ ரேட் விகிதம் 40 பாயிண்ட் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் 50 பாயிண்ட் அடிப்படையிலும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 3ஆம் முறையாக ரெபோ ரேட் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Home Loan, Loan

    அடுத்த செய்தி