HDFC வங்கியின் இழப்பினால் ஐ.சி.ஐ.சி.ஐ கிரெடிட் கார்டுகளுக்கு லாபம்: காரணம் என்ன?

Credit Cards

அனைத்து கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளையும் பின்னுக்குத் தள்ளியது, ஐசிஐசிஐ.

  • Share this:
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வெளியீட்டின் படி, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் எண்ணக்கையில் 6,61,950 அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி மேலும் 243,527 கார்டுகளை வழங்கியுள்ளது.

எச்.டி.எஃப்.சி வங்கி, புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கக்கூடாது என்று கடந்த டிசம்பர் மாதம் முதல் தடைவிதித்திருந்து இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகவே கிரெடிட் கார்டு சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், HDFC வங்கியின் கிரெடிட் கார்டு கிட்டில், 528,447 அட்டைகள் குறைந்துள்ளன. ஆனால், ஐசிஐசிஐ வங்கியில் 1.16 மில்லியன் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அனைத்து கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளையும் பின்னுக்குத் தள்ளியது, ஐசிஐசிஐ.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் படி, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் எண்ணக்கை 6,61,950-ஆக அதிகரித்துள்ளது, ஆக்சிஸ் வங்கி மேலும் 243,527 கார்டுகளை வழங்கியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடனான கோ-பிராண்டு கிரெடிட் கார்டு, இந்த லாபத்தின் பின்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கடந்த ஒன்பது மாதங்களில் பெற்றுள்ளது.

Also Read:  ரோல்ஸ் ராய்ஸ் கார் சொந்தக்காரர் ரூ.35,000 மின்திருட்டில் சிக்கினார்!

இருப்பினும், கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான தடை விதிப்பு தற்காலிகமானது மற்றும் தடை நீக்கப்பட்ட பிறகு "அதிகப்படியான முயற்சி" உடன் சந்தைக்கு திரும்புவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாக தெரிவித்தது எச்.டி.எஃப்.சி வங்கி. ஆர்.பி.எல் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா போன்ற பிற மற்ற வங்கிகள், கிரெடிட் கார்டுகளின் நிலுவைத் தொகையை அதிகரித்துள்ளன.

Also Read:  அவ்ளோ கண்டிப்பான பழங்குடியின கிராமத்துக்குள்ளேயே கொரோனா பரவியது எப்படி?: குழம்பும் அதிகாரிகள்!

இருப்பினும், கோட்டக் மஹிந்திரா வங்கி, சிட்டி வங்கி மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற சில பெரிய வங்கிகள், தங்கள் போர்ட்ஃபோலியோ சரிவில், நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டுகளே உள்ளன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை, விதிமுறைகளுக்கு இணங்காததால், அவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி அவர்களை இந்தியாவில் சேமிக்கக் கோரியது பணம் செலுத்தும் முறையின் டேட்டா ஸ்டோரேஜ் வழிமுறைகளுக்கு இணங்காததால், மே 1 முதல் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒட்டுமொத்தமாக, சந்தையில் நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 2.2 மில்லியன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. அல்லது, டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 3.79 சதவீதம் அதிகரித்து, 60.11 மில்லியனில் இருந்து 62.3 மில்லியனாக அதிகரித்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தின் செலவிடும் போக்குகளை மே மாதத்துடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகரித்துள்ளன. மார்ச் மாதம் தவிர்த்து, இந்த நிதியாண்டின் அனைத்து மாதங்களோடு ஒப்பிடும்போது ஜூன் 2021 செலவு செய்யும் போக்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
Published by:Arun
First published: