Home /News /business /

பணம் அனுப்பும் விதிமுறையை திடீரென்று மாற்றிய எச்.டி.எப்.சி வங்கி!

பணம் அனுப்பும் விதிமுறையை திடீரென்று மாற்றிய எச்.டி.எப்.சி வங்கி!

எச்.டி.எப்.சி வங்கி

எச்.டி.எப்.சி வங்கி

எச்.டி.எப்.சி வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, யூபிஐ பரிவர்த்தனை பயன்படுத்துவோர் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும்

    பிரபல தனியார் வங்கியான எச்.டி.எப்.சி வங்கி யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ளது.

    இந்த அவசர உலகில் UPI எனப்படும் Unified Payments Interface முறையில் பணப்பரிமாற்றம் என்பது மிக மிக சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதில்  யூசர்கள் பணத்தை அனுப்ப / பெற, விர்ச்சுவல் பேமென்ட் அட்ரெஸ் அல்லது க்யூஆர் கோட் மூலம் எந்த தொந்தரவும் இல்லாமல் பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தலாம். 24/7 என்கிற அடிப்படையில், ஆண்டின் 365 நாட்களுக்கும் அணுக கிடைக்கும் இந்த பண பரிவர்த்தனை செயல்முறையானது, பணம் அனுப்புவது மற்றும் பெறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வங்கி விடுமுறை நாட்களில் கூட இதை அணுகலாம்.

    Bank Holidays April: வங்கிகளுக்கு இந்த வாரத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும் தெரியுமா?

    சமீபத்திய கணக்கீட்டின் படி தினசரி யூபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் மொபைலிலேயே உடனடியாக ஈசியாக பணம் அனுப்பவோ பெறவோ முடியும். இந்நிலையில் இந்த யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளில் எச்.டி.எப்.சி வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி அறிவித்திருக்கும் புதிய விதிமுறைப்படி, யூபிஐ பரிவர்த்தனை பயன்படுத்துவோர் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும். அதே போல் கஸ்டமர்கள் ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    PF Account : மாத சம்பளக்காரர்கள் இருமடங்கு இழப்பில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்கள்!

    இந்த 10 பரிவர்த்தனை வரம்பு என்பது பில் கட்டணம், கடைகளில் பணம் செலுத்துவது, ஷாப்பிங் பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது என்பதை நோட் செய்து கொள்ளுங்கள். இது வெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும். வாடிக்கையாளர்கள் செய்யும்
    பரிவர்த்தனைகள் 24 மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின்
    மொபைல் நம்பர் மாற்றியிருந்தால் முதல் 24 மணி நேரத்தில் ஆண்ட்ராய்டு போனில் , முதல் 72 மணி நேரத்தில் ஐபோனில் ரூ.5000 மட்டுமே அனுப்ப முடியும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

    எனவே இனிவரும் நாட்களில் யூபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறைகளை மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள். இதுக் குறித்த கூடுதல் விவரங்களை ஆன்லைனிலும் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: HDFC, HDFC Bank, UPI

    அடுத்த செய்தி