பிரபல வங்கி செய்த முக்கிய மாற்றம்! இனிமே அந்த பிரச்சனையே இல்லை

பிரபல வங்கியின் முக்கிய அப்டேட்

வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal.

 • Share this:
  எச்டிஎஃப்சி வங்கியின் ‘Cardless cash withdrawal’ திட்டம் குறித்து இதுவரை தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க.

  எச்.டி.எப்.சி வங்கி சில வாரங்களுக்கு முன்பு அப்டேட் செய்த இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த சூப்பரான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்பெல்லாம் பர்சில் எப்போதுமே பணம் இருக்க வேண்டிய சூழல் போகி கார்டுகள் நிரம்பின. ரொக்க பரிவர்த்தனை குறைந்து கார்டுகள் பயன்பாடு அதிகரித்தது. அதன் பின்பு ஃபோன்பே ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்தும் முறைகள் பயன்பாட்டிற்கு வந்தன. இப்படி அடிக்கடி மாற்றங்கள் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க வங்கிகளும் தங்கள் பங்குக்கு அவ்வப்போது அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்காக எச்.டி.எப்.சி வங்கி அறிமுகப்படுத்திய திட்டம் தான் இந்த Cardless cash withdrawal.

  இந்த திட்டம் வழங்கும் வசதி என்னவென்றால் வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம். கார்டு இல்லாமலேயே உடனடியாகவும், பாதுகாப்பாகவும் பணம் எடுத்துக்கொள்ள இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். அல்லது மாதம் 25,000 ரூபாய் வரை ஏடுத்துக்கொள்ளலாம்.

  also read... சேமிப்பு திட்டத்தில் லட்சங்களில் வருமானம் பெற இதுதான் ஒரே வழி!

  செய்ய வேண்டியவை:

  வாடிக்கையாளர்கள் முதலில் எச்.டி.எப்.சி வங்கி ஆன்லைன் நெட் பேங்கிங்கை லாகின் செய்ய வேண்டும், பின்பு அதில் இருக்கும் பணப்பரிமாற்றம் (fund transfer) என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும். உங்களது வங்கிக் கணக்கினை தேர்தெடுக்கவும். அதன் பிறகு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அதனை இரண்டாவது பாக்ஸில் கொடுத்து கிளிக் செய்யவும்.

  அனுப்ப வேண்டிய தொகையை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இதன் பிறகு யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போகும். அதன் மூலம் அருகிலுள்ள ஏடிஎம் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இது 24 மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் அதன் பின்பு அந்த மெசேஜ் காலாவதி ஆகிவிடும் செயல்படாது.

  பணம் பெற்றவர் செய்ய வேண்டியவை:

  அருகில் இருக்கும் ஏடிஎம் சென்று பணத்தினை எடுக்க மொபைல் எண்ணுக்கு வரும் 4 இலக்க ஓடிபியும் மற்றும் 9 இலக்க ஐடியை உள்ளிடவும். இதற்கு வங்கி ஏடிஎம்மில் cardless cash என்ற ஆப்சனை தேர்தெடுக்க வேண்டும் அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி மற்றும் ஐடியை கொடுத்த அந்த பணத்தை எடுக்கலாம்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: