Home /News /business /

HDFC Car Loan: 30 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக கார் லோன் - அதிரடி திட்டத்தை தொடங்கியது ஹெச்டிஎஃப்சி வங்கி

HDFC Car Loan: 30 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக கார் லோன் - அதிரடி திட்டத்தை தொடங்கியது ஹெச்டிஎஃப்சி வங்கி

30 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக கார் லோன்

30 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக கார் லோன்

HDFC Bank | வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிட கால அளவில் டிஜிட்டல் வழியாக கார் லோன் வழங்கும் திட்டத்தை ஹெச்டிஎஃப்சி வங்கி அறிமுகம் செய்துள்ளது.

    நாட்டின் பொருளாதார சூழல் மீண்டும் ஏற்றம் கண்டு வரும் சூழலில், வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிட கால அளவில் டிஜிட்டல் வழியாக கார் லோன் வழங்கும் திட்டத்தை ஹெச்டிஎஃப்சி வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு Xpress Car Loans என்று ஹெச்டிஎஃப்சி வங்கி பெயரிட்டுள்ளது.

    நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றாக ஹெச்டிஎஃப்சி உள்ளது. இந்நிலையில், வங்கி தொழில் துறையில் முதல் முறையாக தங்களுடைய வங்கி சார்பில் தான் ஆன்லைன் மூலமாக 30 நிமிடங்களில் கார் லோன் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், உலகிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    தற்போது 48 - 72 மணி நேரம்

    தற்போதைய சூழலில், எந்தவித சிக்கல்களும் இன்றி, நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் கார் லோன் பெறுவதற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரையிலும் ஆகிறது. வீட்டுக் கடன் திட்டத்திற்கு அடுத்தபடியாக, தனிநபர் ஒருவர் பெறும் அதிகபட்ச கடன் தொகை கார் வாங்குவதற்கானதாக இருக்கிறது.

    ALSO READ |  சியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
     

    ரூ.15,000 கோடி கடன் வழங்க திட்டம்

    வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்காமலேயே கடன் வழங்கும் திட்டத்தை செய்து முடிக்க முடியும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி கருதுகிறது. அந்த வகையில் 2023ஆவது நிதியாண்டில் ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையில் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 30 நிமிடங்களில் கார் லோன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள அதே வேளையில், இதேபோன்று டூ வீலர்களுக்கும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

    ஆன்லைனில் தேடி, நேரில் வாங்கும் வாடிக்கையாளர்கள்

    கார் வாங்க விரும்பும் 90 சதவீத வாடிக்கையாளர்கள் அதுகுறித்த தகவல்களை ஆன்லைன் மூலமாக தேட தொடங்குகின்றனர். ஆனால், இறுதியாக அவர்களில் 2 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் டீலர்களை அணுகுகின்றனர். அதில் வெகுசிலர் மட்டுமே கார் லோனை ஆன்லைன் வாயிலாக பெறுகின்றனர்.

    ALSO READ |  ஹேப்பி நியூஸ்! குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

    இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்தியப் பிரிவு தலைவர் அரவிந்த் கபில் கூறுகையில், ”ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஏற்கனவே அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் 20 முதல் 30 சதவீதத்தினரையும், இது வரை அக்கவுண்ட் வைத்திருக்காதவர்களையும் எக்ஸ்பிரஸ் கார் லோன் திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

    கார் வாங்குபவர்களில் சுமார் 55 சதவீத வாடிக்கையாளர்கள், நேரடி தொடர்பு பரிவர்த்தனை முறையை தவிர்க்க விரும்புகின்றனர் என்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: HDFC

    அடுத்த செய்தி