Home /News /business /

எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி வட்டி அதிகமாக கிடைக்க போகுது!

எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி வட்டி அதிகமாக கிடைக்க போகுது!

எச்.டி.எப்.சி வங்கி

எச்.டி.எப்.சி வங்கி

எச்.டி.எப்.சி கணக்குகளுக்கான வட்டி விகிதம் ரூ 50 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு இருப்புகளுக்கு 3.50% ஆக இருக்கும்

    எச்.டி.எப்.சி பேங்கில் சேமிப்பு திட்டத்தை தொடங்கி இருப்பவர்கள் கவனத்திற்கு.. வங்கி நிர்வாகம் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.

    எச்.டி.எப்.சி வங்கி, சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. ஏப்ரல் 6, 2022 முதல் இந்த புதிய வட்டி மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட விகிதத்தின்படி, எச்.டி.எப்.சியில் ரூ. 50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ரூ 50 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு இருப்புகளுக்கு 3.50% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

    என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ டெபாசிட்கள் உட்பட சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள்,வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேமிப்பு வட்டி உங்கள் கணக்கில் உள்ள தினசரி இருப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு காலாண்டு இடைவெளியில் வங்கியால் செலுத்தப்படுகிறது. இது மட்டுமில்லை, எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. அதாவது, இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை தொடங்கியவர்களுக்கும் இனி கூடுதல் வட்டி கிடைக்க போகிறது.

    ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் முதிர்ச்சியடையும் ரூ 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் எச்.டி.எப்.சி அதிகரித்துள்ளது. புதிய விகிதங்கள் ஏப்ரல் 6, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி 2.5% முதல் 5.6% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

    எஸ்பிஐ போலவே PNB கொண்டு வந்திருக்கும் அதிரடி மாற்றம்.. வாடிக்கையாளர்கள் உஷார்!

    இதற்கிடையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ரூ10 லட்சத்திற்கும் குறைவான இருப்புகளுக்கான வட்டி விகிதத்தை 2.70% ஆகக் குறைத்துள்ளது. ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருப்பு வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.75% ஆக குறைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Fixed Deposit, HDFC, Savings

    அடுத்த செய்தி