முகப்பு /செய்தி /வணிகம் / சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தனியார் வங்கி தரும் ஒரு வாய்ப்பு!

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தனியார் வங்கி தரும் ஒரு வாய்ப்பு!

 லோன்

லோன்

வட்டி விகிதம் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் பொதுவானது

  • Last Updated :

சொந்த வீடு என்பது உங்களின் வாழ்நாள் கனவா? இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.

கடந்த சில நாட்களாக வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்த நல்ல செய்திகள் சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம், பண்டிகை காலம் தொடங்க இருப்பது தான். எப்போதுமே பண்டிகை காலங்களில் அதாவது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு சிறப்பு சலுகைகளாக வங்கிகள் லோன் ஆஃபர்கள், கார் லோன்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் பிரபல தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிக்கைகால சிறப்பு சலுகையாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, கொடாக் மகிந்த்ரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஹோம் லோன், கார் லோன்களில் பல சலுகைகளை அறிவித்துவிட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது எச்.டி.எப்.சி வங்கியும் களத்தில் குதித்துள்ளது.

அதாவது எச்டிஎஃப்சி வங்கியும் வீட்டுக் கடன்களுக்கு வட்டியை குறைத்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சொந்த வீடு கனவை நிறைவேறி கொள்ள வாடிக்கையாளர்கள் 6.70% வட்டிக்கு கடன் பெறலாம். ஏற்கெனவே எச்.டி.எப்.சியில் வீட்டுக்கடன் வட்டி 6.75% ஆக இருந்து தற்போது இது பண்டிக்கை கால சிறப்பு சலுகையாக குறைக்கப்பட்டுள்ளது. புதியதாக ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இந்த வட்டி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் பொதுவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த வட்டி விகிதம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல முன்னணி வங்கிகள் கடன் திட்டத்தில் அதிரடியாக வட்டியை குறைத்து அறிவித்து வருகின்றன. இப்போது அந்த வரிசையில் எச்.டி.எப்.சி வங்கியும் இணைந்துள்ளது. எஸ்பிஐ வங்கி இதே வகையான ஹோம் லோனில் செயல்பாட்டு கட்டணத்தையும் முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொந்த வீட்டுக்காக வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் இதுப்போன்ற பண்டிக்காலங்களில் வங்கிகள் தரும் சிறப்பன ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: HDFC