Home /News /business /

HDFC BANK இரண்டாவது முறையாக டெபாசிட் கணக்குகளுக்கு வட்டியை அதிகரித்துள்ளது

HDFC BANK இரண்டாவது முறையாக டெபாசிட் கணக்குகளுக்கு வட்டியை அதிகரித்துள்ளது

HDFC BANK தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிலையான வைப்பு நிதிகளுக்கு வட்டி அதிகரிப்பை அறிவித்துள்ளது. நிலையான வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும்.

HDFC BANK தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிலையான வைப்பு நிதிகளுக்கு வட்டி அதிகரிப்பை அறிவித்துள்ளது. நிலையான வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும்.

HDFC BANK தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிலையான வைப்பு நிதிகளுக்கு வட்டி அதிகரிப்பை அறிவித்துள்ளது. நிலையான வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சமீபமாக பல்வேறு வங்கிகளும், வங்கி சேமிப்புக் கணக்குக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. அதே போல, HDFC வங்கியும் அறிவித்தது. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிலையான வைப்பு நிதிகளுக்கு வட்டி அதிகரிப்பை அறிவித்துள்ளது.

நிலையான வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும். நீங்கள் குறுகிய காலம் முதல் நீண்ட கால வைப்பு நிதிக் கணக்கில் பணம் சேமிக்கலாம். ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அரசு வங்கி, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்து வகையான நிறுவனங்களுமே வழங்குகின்றன.

ஃபிப்ரவரி மாதத்தில், தனது பை-மன்த்லி மானிட்டரி பாலிசியின் படி, இந்திய ரிசர்வ் வங்கி தனது நிலையை நிர்வகித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல வங்கிகள் தனது வைப்பு நிதிகளுக்கான வட்டி விகித்தத்தை அதிகரித்தன. இதன் அடிப்படையில், HDFC வங்கி, 2 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதம் ஃபிப்ரவரி 14 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

தனியார் வங்கியான HDFC, 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான கால அளவு உள்ள FD கணக்குகள் முதிர்வடையும் போது, 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.



 

30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கால அளவு உள்ள FD கணக்குகள் முதிர்வடையும் போது, 3 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

Also Read : Fixed Deposit கணக்குகளுக்கு வட்டி அதிகரிப்பு – SBI அறிவிப்பு

91 நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கால அளவு உள்ள FD கணக்குகள் முதிர்வடையும் போது, 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு ஆண்டுக்குள் முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 4.40 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

Also Read : ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை?

ஒரு வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.



இரண்டு வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.30 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.70 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

Also Read : இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!

மூன்று முதல் ஐந்து வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.45 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஆறு முதல் பத்து வருடம் வரை முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.60 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: HDFC Bank, Interest rate hike

அடுத்த செய்தி