ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த மாதத்தில் இது 2வது முறை.. எச்டிஎப்சி வங்கியின் புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?

இந்த மாதத்தில் இது 2வது முறை.. எச்டிஎப்சி வங்கியின் புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?

எச். டி.எப்.சி வங்கி

எச். டி.எப்.சி வங்கி

எச்டிஎப்சி Term deposit திட்டத்தின் வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எச்டிஎப்சி வங்கி இந்த மாதத்தில் 2வது முறையாக பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

  கடன் வழங்குதலில் முதன்மையான வங்கியாக செயல்படும் எச்டிஎப்சி நேற்றைய தினம் (26.10.2022) பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் எச்டிஎப்சி 2வது முறையாக பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டியை உயர்த்தியுள்ளது. ரூ 2 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைகளுக்கு இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும். எச்டிஎப்சி வங்கி FD வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் (bps) வரை உயர்த்தியுள்ளது.

  மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு உடனே ஓகே ஆகும் பர்சனல் லோன்! என்ன காரணம் தெரியுமா?

  இந்த உயர்வுக்குப் பிறகு, எச்டிஎப்சி வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 6.25% வரையிலான வட்டி விகிதத்தை பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 50 bps கூடுதல் வட்டி விகிதத்தைப் அளிக்கிறது இந்த புதிய வட்டி உயர்வுக்குப் பிறகு, மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD களில் 3.5% முதல் 6.95% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

  எச்டிஎப்சி வங்கியில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்:

  7 - 14 நாட்கள் 3.00%

  15 - 29 நாட்கள் 3.00%

  30 - 45 நாட்கள் 3.50%

  46 - 60 நாட்கள் 4.00%

  61 - 89 நாட்கள் 4.50%

  90 நாட்கள் - 6 மாதங்கள் 4.50%

  6 மாதங்கள் 1 நாட்கள் - 9 மாதங்கள் 5.25%

  9 மாதங்கள் 1 நாள் முதல் - 1 வருடம் 5.50%

  1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை 6.10%

  15 மாதங்கள் முதல் - 18 மாதங்கள் வரை 6.15%

  18 மாதங்கள் முதல் - 21 மாதங்கள் வரை 6.15%

  21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 6.15%

  2 ஆண்டுகள் 1 நாள் - 3 ஆண்டுகள் 6.25%

  3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.25%

  5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.20%

  எச்டிஎப்சி Term deposit திட்டத்தின் வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது. இப்போது 4.50 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான கால அவகாசத்துடன் வழங்குகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Fixed Deposit, HDFC, Savings