ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 26% உயர்வு!

மென்பொருள் சேவை வருவாய் மட்டும் 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

news18
Updated: February 6, 2019, 2:33 PM IST
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் 26% உயர்வு!
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
news18
Updated: February 6, 2019, 2:33 PM IST
இந்தியாவின் டாப் 5 ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தனது காலாண்டு அறிக்கையில் 26 சதவீதம் நிகர லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2017-2018 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,075 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருந்த ஹெச்சிஎல் 2018 அக்டோபர் முதல் 2018 டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 2,605 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

மூன்றாம் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 2,563 கோடி ரூபாய் லாபம் அடையும் என்று எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபத்தை அடைந்துள்ளது.

மென்பொருள் சேவை வருவாய் மட்டும் 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது. காலாண்டு வாரியாக ஹெச்சிஎல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

“நுகர்வோர் மற்றும் எண்ட்டர்பிரைஸ் பிரிவு வணிகத்தில் தொடர்ந்து அதிகக் கவனம் செலுத்தியதும் தான் லாபம் உயர்ந்ததற்கான காரணம்.

வரும் காலங்களில் ஏற்கனவே தங்களிடம் உள்ள திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த உள்ளோம்” என்றும் ஹெச்சிஎல் நிர்வாக இயக்குனர் ரங்கராஜன் ராகவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: கண்ணாடி பாட்டிலில் பசும்பால்... வாடிக்கையாளர்கள் இருமடங்காக உயர்வு
First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...