ரூ.12,600 கோடி மதிப்பிலான ஐபிஎம் சொத்துக்களை வாங்கும் இந்திய நிறுவனம்!

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெச்.சி.எல் நிறுவனம் ஐ.பி.எம்.மின் என 7 துறை சார்ந்த வணிகங்களை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 3:47 PM IST
ரூ.12,600 கோடி மதிப்பிலான ஐபிஎம் சொத்துக்களை வாங்கும் இந்திய நிறுவனம்!
ஐ.பி.எம்
Web Desk | news18
Updated: December 7, 2018, 3:47 PM IST
ஐபிஎம் நிறுவனம் தங்களது சில மென்பொருள் வணிகம் சார்ந்த சொத்துக்களை இந்தியாவின் ஹெச்.சி.எல் நிறுவனத்துக்கு விற்க இருப்பதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சிப் மேக்கிங் மற்றும் மென்பொருள் நிறுவனமான ஐபிஎம் தங்களது 1.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 12,600 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துக்களை ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கு விற்க இருக்கிறது.

ஹைபிரிட் கிளவுட் சந்தையைக் கைப்பற்ற ஐபிஎம் முடிவு செய்துள்ளது. அதற்குத் தேவையான நிதியைத் திரட்ட தங்களது சில சொத்துக்களை மட்டும் விற்கிறது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெச்.சி.எல் நிறுவனம் ஈ-காமர்ஸ், மனித வளம் மேம்பாடு என 7 துறை சார்ந்த வணிகங்களை வாங்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் இந்தப் பரிவர்த்தனைகள் 2019-ம் ஆண்டு அரையாண்டிற்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை 5 சதவீதத்திற்கும் கூடுதலாகச் சரிந்து 960 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஐபிஎம் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் சிப் வணிகத்தில் சாம்சங் நிறுவனத்திடம் தங்களது சந்தையை இழந்து வருகிறது. அதனைச் சரிசெய்யப் பல்வேறு வகையில் முயன்றும் அவற்றில் தோல்வி அடைந்த நிலையில் கிளவுட் மென்பொருள் சேவையில் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளது.
Loading...
ஹெச்.சி.எல் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் தோற்றுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இணையத்தை கலக்கும் விஜய்-அஜித் வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்