Home /News /business /

வருமான வரி அறிவிப்பு நோட்டீஸ் உங்களுக்கு வந்துள்ளதா.? முதலில் இதை மட்டும் சரிபார்க்கவும்.!

வருமான வரி அறிவிப்பு நோட்டீஸ் உங்களுக்கு வந்துள்ளதா.? முதலில் இதை மட்டும் சரிபார்க்கவும்.!

வருமான வரி

வருமான வரி

Income Tax Intimation Notice | நீங்கள் அனுப்பும் வருமான விபரங்கள் மற்றும் வரிக் கணக்கீடுகள் வரித்துறையின் மதிப்பீடுகள் மற்றும் கணக்கீடுகளுடன் பொருந்தாத நிலையில் தான் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு நோட்டீஸ் கிடைக்கும் பட்சத்தில் முதலில் நீங்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரி விபரங்கள், எண் பிழைத் திருத்தம், கூடுதல் வரிக் கோரிக்கை அறிவிப்பு எதுவும் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

2021-22 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை 31, 2022வுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வரி செலுத்துவோர் வழங்கிய தகவல்களைச் சரிப்பார்த்து வருமான வரித்துறையுடன் உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் வருமான வரி வலைத்தளங்களில் உங்களது அனைத்து விபரங்களையும் நீங்கள் சரிபார்த்து அனுப்ப வேண்டும். இவ்வாறு வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதது, கணக்கீடு பிழைகள், வருமானத்தை சரியாகத் தெரிவிக்காதது அல்லது அதிக ரீஃபண்ட் கோருவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும்.

குறிப்பாக வருமான வரித்துறை, ITR தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து 9 மாதங்களுக்குள் வரி செலுத்துவோருக்கு அறிவிப்பை அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், நோட்டீஸ் அறிவிப்பிற்கு என்ன காரணங்கள் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.



வருமான வரி நோட்டீஸ் அனுப்பக் காரணங்கள்?

நீங்கள் அனுப்பும் வருமான விபரங்கள் மற்றும் வரிக் கணக்கீடுகள் வரித்துறையின் மதிப்பீடுகள் மற்றும் கணக்கீடுகளுடன் பொருந்தாத நிலையில் தான் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருமான வரிக்கணக்கில் உங்களது வரியைத் தவறாகக் கணக்கிட்டிருக்கலாம் அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரி இருக்கக்கூடும். இதோடு உங்களது வரிப் பொறுப்புடன் ஒப்பிடும் போது கூடுதல் வரிகளைச் செலுத்தியுள்ளீர்கள்? என்றால் வருமான வரி திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை நோட்டீஸ் வாயிலாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Also Read : வருமான வரி ரீஃபண்டு பெறுகிறீர்களா? சான்றுகள் இல்லையென்றால் 200% அபராதம்!

வருமான வரித்துறை அனுப்பும் நோட்டீஸை எப்படி திறப்பது?

வருமானத் துறை அலுவலகத்திலிருந்து நீங்கள் பெறும் அறிவிப்பு நோட்டீஸில் உள்ள தகவல்களை ஆன்லைனில் பார்ப்பதற்கு (Password) கடவுச்சொல் முக்கியம். உங்களது பான் எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு கடவுச்சொல்லை என்டர் செய்து என்ன தகவல்கள் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.



வருமான வரி நோட்டீஸில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது?

உங்களுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்தவுடன் முதலில் நீங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அதாவது பெயர், முகவரி, பான் போன்ற பிற அடிப்படை விஷயங்கள் அனைத்தும் சரியானதா? இல்லையா? என்பதை சரிப்பார்க்க வேண்டும்.

இந்த விபரங்களைச் சரிப்பார்த்தவுடன், அடுத்தக் கட்டமாக உங்கள் ITR ல் நீங்கள் கொடுத்துள்ள வருமான கணக்கீட்டையும், வருமானத்துறை அறிவித்துள்ள கணக்கும் சரியாக உள்ளதா? என சரிபார்க்க வேண்டும்.

Also Read : டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... அக்டோபர் முதல் புதிய விதிகள்

பின்னர் வரி தாக்கலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அனைத்து விவரங்களையும் ஆரம்ப கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு அதன் முடிவை வருமானவரி அலுவலகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Income tax

அடுத்த செய்தி