வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்.. கடைசி நேரம் வரையில் காத்திருக்காதீர் என அறிவுறுத்தல்..

வருமான வரி செலுத்த இன்றே கடைசி நாள்.. கடைசி நேரம் வரையில் காத்திருக்காதீர் என அறிவுறுத்தல்..

கோப்புப் படம்

வணிகத்துக்கு (Business) ITR -3 மற்றும் ITR 6 படிவங்களை மூலம் வருமானவரி தாக்கல் செய்யலாம், அதே நேரத்தில் ITR -2 படிவம் மூலம் குடியிருப்பு சொத்திலிருந்து வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2019 -20-ஆம் ஆண்டுக்கான வருமான வரி (income tax) செலுத்துவதற்கான தேதி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், வரி செலுத்துவோர் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019 -20ம் ஆண்டுக்கான வருமான வரி (income tax) செலுத்தும் தேதி முதலில் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழக்கையின் நிலைமை சீரடையாததால் அக்டோபர் மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி (income tax) செலுத்துவதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து டிவிட்டரில் வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ள வருமானவரித்துறை, இதுவரை வருமானவரி செலுத்தாதவர்கள் நாளைக்குள் வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வரி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வரி செலுத்துவோருக்கு ஏற்ப ஒரு சில சலுகை தேதிகளையும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது. தணிக்கை செய்யப்படாத தனி நபர் வருமானவரியை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்தலாம் என கூறியுள்ளது. இதேபோல், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் வருமான வரி செலுத்துவோரும் ஜனவரி 31,2021-க்குள் வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் கட்டுப்பாட்டு மையம் (The Central Board of Direct Taxation), இன்றுடன் 2019 -20ம் ஆண்டுக்கான வரி செலுத்தும் காலவகாசம் முடிவடைய உள்ளதாக கூறியுள்ளது. வருமானவரி செலுத்துவோர், அந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு இதுவரை வரிசெலுத்தாமல் இருந்தால் உடனடியாக வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி வரை நாடு முழுவதும் 4.23 கோடி பேர் வரி தாக்கல் செய்துள்ளதாக வருமானவரித்துறை (income tax) தெரிவித்துள்ளது. 

Also read... LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.. ஓய்வூதிய சேவை பற்றி இங்கே படியுங்கள்..

50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருவாய் ஈட்டிய தனிநபர்கள், வருமானவரித்துறை படிவம் ITR-1 -ஐ பயன்படுத்தி வரி செலுத்த வேண்டும். எல்.எல்.பி ( LLP) தவிர பிற குடியிருப்பாளர்கள், எச்.யு.எஃப், நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழிலில் கிடைக்கும் கூடுதல் வருமானம் ஆகியவற்றின் மொத்த வருமானம் ரூ .50 லட்சம் வரை வருவாயாக ஈட்டுவோர் ITR-4 Sugam படிவம் மூலம் வருமானவரி செலுத்தலாம்.

வணிகத்துக்கு (Business) ITR -3 மற்றும் ITR 6 படிவங்களை மூலம் வருமானவரி தாக்கல் செய்யலாம், அதே நேரத்தில் ITR -2 படிவம் மூலம் குடியிருப்பு சொத்திலிருந்து வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும். ITR-5 படிவம் மூலம் எல்.எல்.பி மற்றும் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் (LLP and Association of Persons) வரி செலுத்த வேண்டும். ஐடிஆர் -7 படிவத்தைப் பயன்படுத்தி தொண்டு நிறுவனம் அல்லது மதம் சார்ந்த அமைப்புகளின் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் வரி செலுத்தலாம். வருமானவரியை விரைவாக செலுத்துவதற்கான நடைமுறைகளையும் வருமானவரித்துறை எளிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: