பிபிஎஃப் அக்கவுண்ட் திட்டத்தின் கீழ், உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தை நீங்கள் சேமித்து வருகிறீர்களா? அப்படி என்றால், தனிநபர் ஒருவர் அவரது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஎஃப் அக்கவுண்ட் திறப்பதற்கு அனுமதி கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிஎஃப் விதிகள் 2019 இன் படி இது கட்டாயமாகும்.
எனினும், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகான காலத்தில் தனிநபர் ஒருவர், இரண்டாவது பிபிஎஃப் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருந்தால், அதுபோன்ற அக்கவுண்ட் அல்லது அக்கவுண்ட்கள் முடித்து வைக்கப்படும். ஆனால், இதுபோன்ற சமயங்களில் உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்துக்கு அதிகாரிகள் வட்டி வழங்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பிஎஃப் கணக்குகளைத் திறக்கக் கூடாது என தெரிந்திருந்தாலும் கூட சிலர், வேண்டுமென்றே அத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெவ்வேறு வங்கிகளில் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கூடுதல் பிஎஃப் அக்கவுண்ட்களை திறக்கின்றனர்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பிஎஃப் அக்கவுண்ட் ஓப்பன் செய்தார் என்றால், அதே நபர் வேறொரு வங்கியில் 2020 ஜனவரியில் மற்றொரு அக்கவுண்ட் ஓப்பன் செய்துள்ளார். அத்தகைய சந்தர்ப்பத்தில் இரண்டாவது கணக்கில் எந்தவித வட்டியும் செலுத்தாமல் அந்தக் கணக்கு மூடப்படும். இதுபோன்ற நிகழ்வு ஒன்றை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சக சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில், கேஜிஎம் கல்லூரியில் உள்ள இந்தியன் வங்கியில், டாக்டர். அனுபம் மிஸ்ரா என்பவரால் திறக்கப்பட்ட அக்கவுண்ட் நம்பர்: 7003137726 என்பது, 2019ஆம் ஆண்டின் பிபிஎஃப் விதிகளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஒன்றாகும். எனவே, அதை இணைப்பதற்கான தகுதி கிடையாது.அதேசமயம், எந்தவித வட்டியும் செலுத்தாமல் அந்த அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளலாம். பிபிஎஃப் விதிகள் - 2019, மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிகளின் படி திறக்கப்பட்ட எந்தவொரு பிஎஃப் கணக்குகளையும் இணைப்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டாம் என தொடர்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகான காலத்தில் திறக்கப்பட்ட கணக்கு அல்லது கணக்குகளை இணைக்க வேண்டும் என்று விரும்பினால், அவற்றுக்கு எந்தவித வட்டியும் வழங்காமல் முடித்து வைக்கப்பட வேண்டும். அத்தகைய பிபிஎஃப் அக்கவுண்ட்களை இணைத்து வைக்கும்படி இயக்குநரக அலுவலகத்திற்கு எந்தவொரு பரிந்துரையும் வரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : Fixed Deposit திட்டத்தை இந்த வங்கிகளில் தொடங்கினால் இப்படியொரு சலுகையா?
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார நலத் துறை வெளியிட்டுள்ளது. இதில், பிஎஃப் கணக்குகளை இணைப்பது குறித்த பரிந்துரைகள் மீது அதிகாரிகள் முடிவெடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.