Home /News /business /

யாரேனும் உங்கள் பெயரில் கடன் பெற்று விட்டார்களா? - அப்படியானால் உடனே இதை செய்யுங்கள்

யாரேனும் உங்கள் பெயரில் கடன் பெற்று விட்டார்களா? - அப்படியானால் உடனே இதை செய்யுங்கள்

 கடன்

கடன்

செய்யாத ஒரு தவறுக்காக உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுகிறது என்பதையும், அது எப்படி சாத்தியம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

யாராவது உங்கள் பெயரில் கடன் பெற முடியுமா? அதற்கான வாய்ப்புகள் இல்லை தான். ஆனால், சமீபத்தில் ஒரு நிதி நிறுவனம் மூலமாக தங்கள் பான் கார்டு விவரத்துடன் கடன் வழங்கப்பட்டிருப்பதாக பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்தனர். ஆனால்,  சோகம் என்ன என்றால், இதில் பல கடன்கள் முறைகேடானவை ஆகும். இருப்பினும், செய்யாத ஒரு தவறுக்காக உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுகிறது என்பதையும், அது எப்படி சாத்தியம் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களில் பான் எண் குறிப்பிடப்படுகிறது. சில சமயம் அவை சரி பார்க்கப்படாமலேயே கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது பான் எண்-ஐ கூட குறிப்பிட்டு வேறொருவர் கடன் பெற்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால், உங்கள் பான் கார்டை நீங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் யார், யாரிடம் நீங்கள் பான் நகல்களை வழங்கியுள்ளீர்கள் என்பது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ALSO READ |  வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... RBI கொடுத்த மிக முக்கியமான 5 அலர்ட்!

சட்டப்பூர்வமாக கடனுடன் பான் எண் எப்போது இணைக்கப்படும்

நீங்கள் கூட்டு சேர்ந்து கடன் பெறுகிறீர்கள் என்றால் அல்லது ஒருவர் கடன் பெற நீங்கள் உறுதிமொழி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுடன் உங்கள் பான் எண் இணைக்கப்படும். நீங்கள் யாருக்கு உறுதிமொழி கொடுத்தீர்களோ, அந்த நபர் கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார் என்றால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரிலும் எதிரொலிக்கும்.

நீங்கள் கடன் பெற்றிருக்காவிட்டாலும் கூட, நீங்கள் தான் உறுதிமொழி கொடுத்தவர் என்பதால், அதை நீங்கள் திருப்பிச் செலுத்த நேரிடும். நீங்களும் கடனை செலுத்தாவிட்டால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

ALSO READ | Gold Rate: குட் நியூஸ்! ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 880 குறைவு!

கிரெடிட் ஸ்கோரை அவ்வபோது சரிபார்க்கவும்

உங்கள் பான் எண்-ஐ மையமாக வைத்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்களுக்கான கிரெடிட் ரிப்போர்ட் பெறவும். உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து கடன்கள் குறித்தும் அது பட்டியலிட்டுக் காட்டும்.

நீங்கள் எவ்வளவு கடன் பெற்றீர்கள், எந்த ரூபத்தில் பெற்றீர்கள்? அதற்கான பணத்தை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினீர்களா? அந்தக் கடனின் தற்போதைய நிலை என்ன? ஆகிய அனைத்து விவரங்களும் அந்த ரிப்போர்டில் இடம்பெற்று விடும்.

ALSO READ | மாதம் ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
 ஒருவேளை உங்கள் பான் எண்ணில் தவறுதலாக கடன் வழங்கப்பட்டிருந்தாலும், அதை அந்த ரிப்போர்ட் காட்டி விடும். ஆகவே, உரிய காலத்தில் அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் எந்த வகையிலாவது கடன் பெற்றிருந்தால், மாதாந்திர கிரெடிட் ரிப்போர்ட் பெற்றுக் கொள்வது நல்லது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Credit Card, Pan card

அடுத்த செய்தி