புதிய ஆலோசனைகளை வழங்கத் தேவையில்லை. புதிர்க் கேள்விகளைத் தீர்க்கத் தேவையில்லை. மூளையைக் கசக்கும் கேள்விகள் இல்லை. சமுதாயத்தில் நல்ல செயல்களைச் செய்து உங்களை ஊக்கப்படுத்திய நபர்களின் கதைகளைக் கூறுங்கள். இதன் மூலம் ₹17 லட்சம்* வரையிலான ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
News18 உடன் இணைந்து Happygent நிறுவனம் 'Make a dent' எனும் போட்டியை நடத்தவிருக்கிறது. இது சமுதாயத்தில் நல்ல செயல்களைச் செய்து சிறந்த மாற்றத்தைக் கொண்டு வந்த நபர்களின் சுய-ஷாட் வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்து கொள்ள அனைத்து இந்திய மக்களுக்கும் அழைப்பு விடுத்து, அதன் மூலம் அத்தகைய நபர்களின் கதைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தும் ஒரு வகையான போட்டியாகும். இதன் மூலம் இன்னும் பலரைப் சமுதாயத்தில் சிறந்த செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்தலாம்.
https://www.news18.com/makeadent அல்லது Instagram தளத்தில் உங்கள் உள்ளீடுகளைப் படம் அல்லது வீடியோ வடிவத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், மிகப்பெரிய குடிமக்கள் பத்திரிக்கை நிகழ்வுகளில் ஒன்றில் பங்கேற்க உங்களை வரவேற்கிறோம். சிறந்த நீதிபதிகள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு, முதல் 10 உள்ளீடுகளுக்கு மொத்தம் ₹ 17 லட்சம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
இருப்பினும், Happydent & News18 நடத்தும் #MakeADent போட்டியில் பங்கேற்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே காண்போம்.
Make A Dent போட்டியில் பங்கேற்பது எப்படி என்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
● யார் பங்கேற்கலாம்?
இவர்கள்:
மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள்.
● எப்படிப் பங்கேற்பது?
உங்கள் உள்ளீடுகளை www.news18.com/makeadent இல் சமர்ப்பிக்கவும். உங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வீடியோ/புகைப்படத்துடன் இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்பவும்.
அல்லது
#MakeADent என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி @CNNNews18 மற்றும் @happydentind ஆகியவற்றை டேக் செய்து Instagram இல் உங்கள் உள்ளீடுகளை (படம் அல்லது வீடியோக்களை) சமர்ப்பிக்கலாம்.
● வீடியோவை எங்கே சமர்ப்பிப்பது?
- இணையதளம் வழியாக உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், ஒரு சிறிய Happydent ஸ்லேட்டை உங்கள் வீடியோவின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ சேர்க்க வேண்டும். அதை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் வீடியோக்களில் இணைத்துக்கொள்ளலாம். நுழைவுத் தகுதிச் சுற்றில் வெற்றிபெற Happydent ஸ்லேட்டைச் சேர்ப்பது அவசியம்.
- நீங்கள் Instagram ஐப் பயன்படுத்தினால், உங்கள் வீடியோ சமர்ப்பிப்புகளின் ஒரு பகுதியில் #MakeADent Insta ஃபில்டரை இணைக்க வேண்டும். Happydent பல சமூகப் பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டு வரவும், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனிநபர்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஃபில்டரை தொடர்ந்து பயன்படுத்த தேவையில்லை; வீடியோவின் ஒரு பகுதியில் பயன்படுத்தினால் போதும். உங்கள் சமர்ப்பிப்பில் #MakeADent என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் @CNNNews18 மற்றும் @happydentind ஆகியவற்றை டேக் செய்ய வேண்டும். உங்கள் சுயவிவரத்தை அனைவருக்கும் தெரியுமாறு பொதுவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும், அப்படியிருந்தால்தான் எங்களால் உங்கள் பதிவுகளைப் பார்க்க முடியும்.
● புகைப்படத்தை மட்டும் இணைத்து எனது கதையைச் சமர்ப்பிக்கலாமா?
- இணையதளத்தில் பட வடிவிலான உள்ளீடுகளைச், சமர்ப்பிக்கும்போது எந்தவொரு ஃபில்டரையோ டெம்ப்ளேட்டையோ ஸ்லேட்டையோ பயன்படுத்த வேண்டியதில்லை. படத்தில் கதையின் மையக்கருவைக் காட்சிப்படுத்த வேண்டும் மற்றும் படத்தின் பின்னால் சில வரிகளில் முழுக் கதையும் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும், அது ஒரு தனிநபரின் கதையாகவோ அல்லது தனிநபர்கள் அடங்கிய குழுவின் கதையாகவோ இருக்கலாம்.
- Instagram இல் பட வடிவிலான உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கிறீர்கள் என்றால், எந்தவொரு ஃபில்டரையோ டெம்ப்ளேட்டையோ ஸ்லேட்டையோ பயன்படுத்த வேண்டியதில்லை. படத்தில் கதையின் மையக்கருவைக் காட்சிப்படுத்த வேண்டும் மற்றும் அதை விவரிக்கும் வகையில் சில வரிகளுடன் அதற்கான தலைப்பு இருக்க வேண்டும். உங்கள் பதிவில் #MakeADent ஹேஷ்டேகைப் பயன்படுத்தி, @CNNNews18 மற்றும் @happydentind ஆகியவற்றை டேக் செய்ய வேண்டும்.
- கதையைச் சரியாகச் சொல்ல ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் தேவைப்பட்டால் இணைத்துக்கொள்ளலாம். இணையதளத்தில் ஏராளமான புகைப்படங்களைப் பதிவேற்றலாம் மற்றும் இந்த படங்களை சமூக ஊடகங்களில் கேரசலாக இடுகையிடலாம்.
● ஹிந்தி மொழியில் என் உள்ளீட்டைச் சமர்ப்பிக்கலாமா?
ஆம், பயனர்கள் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ தங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கலாம்.
● எனது கதை பொதுவில் வெளியிடப்படுமா?
நீங்கள் Instagram இல் பங்கேற்கிறீர்கள் என்றால் அது பொதுவில் இருக்கும். சிறந்த, வெற்றிகரமான கதைகள் எங்கள் இணையதளம், டிவி சேனல்கள், சமூக ஊடக ஹேண்டில்கள் மற்றும் பிற தளங்களில் பகிரப்படும். News18 மற்றும் Happydent ஆகியவை உங்கள் பதிவுகளை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதற்கான உரிமையை வைத்திருக்கும்.
● எனது கதை எப்படி, யாரால் மதிப்பிடப்படும்?
வீடியோ வடிவிலான உள்ளீடுகளுக்கு – விவாதிக்கப்படும் தலைப்பின் தனித்தன்மை, அதன் சமூகப் பொருத்தம் மற்றும் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், சிறந்த முறையில் கதையைச் சொல்ல ஆடியோ-விஷுவல் கருவிகளின் பயன்பாடு, மொழி மற்றும் வழங்கல் திறன் ஆகியவை அனைத்தும் அனைத்து உள்ளீடுகளையும் தீர்மானிக்கும் போது கருத்தில் கொள்ளப்படும்.
பட வடிவிலான உள்ளீடுகளுக்கு – படத்துடன் கூடிய தலைப்பு அல்லது எழுதப்பட்ட கதையின் அசல் தன்மை, அதன் சமூகத் தொடர்பு மற்றும் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், புகைப்படத்தின் தரம், கதையை சுருக்கமாக காட்சிப்படுத்துவதில் காட்டப்படும் படைப்பாற்றல், அத்துடன் மொழி மற்றும் விளக்கக்காட்சித் திறன்கள் ஆகியவை அனைத்தும் அனைத்து பட அடிப்படையிலான உள்ளீடுகளையும் தீர்மானிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வெற்றிக் கதையை உருவாக்க, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பற்றி இங்கே
செய்ய வேண்டியவை
● அனைத்து Instagram உள்ளீடுகளிலும் ஹேஷ்டேக் மற்றும் ஹேண்டில் டேக் கட்டாயம் இருக்க வேண்டும்.
● வீடியோ உள்ளீடுகள் ஃபிளாகிங் வடிவில் இருக்க வேண்டும்.
● உள்ளீடுகள் ஒரு கதை பாணியில் எழுதப்பட வேண்டும் (நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள், வோல்கர்கள் எப்படி வேறொருவர் பற்றிய கதைகளைக் கொண்ட வீடியோக்களை உருவாக்குகிறார்கள் என்பதைப் போல்).
● அனைத்து உள்ளீடுகளும் தனிநபர் அல்லது தனிநபர்களின் குழுவால் சரி செய்யப்படும் சமூகப் பிரச்சனைகளைக் காட்சிப்படுத்த வேண்டும்.
● வீடியோ உள்ளீடுகளுக்கு, ஒரு சுருக்கமான பைட், ஒரு நேர்காணல் அல்லது உண்மையில் நடிக்கும் நபருடன் ஒரு உரையாடலைச் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
● உள்ளீடுகளை (படம்/வீடியோ) உருவாக்குபவர்களை விட கதையுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
● வீடியோ வடிவிலான உள்ளீடுகள் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
● உள்ளீடுகள் எந்த சூழலையும் விளக்காமல் வெறுமனே கருணை செயலை மட்டும் முன்னிலைப்படுத்தக்கூடாது.
● இசையைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை ஆனால் ஆடியோவில் அது மட்டுமே இருக்கக் கூடாது.
● இசை சார்ந்த ரீல்கள் மட்டும் அல்லாமல் உள்ளீடுகளில் அறிக்கைகளும் விவரங்களும் இருக்க வேண்டும்.
● உள்ளீடுகளில் Happydent நிறுவனத்திற்குப் போட்டியான எந்தப் பிராண்டுகளும் (சாக்லேட், சூயிங் கம்ஸ் அல்லது பிற பிராண்டுகள்) இருக்கக்கூடாது.
மேலும் விவரங்களுக்கு Microsite தளத்தைப் பார்க்கவும் https://www.news18.com/makeadent
இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நேர்மறை எண்ணங்களைப் பரப்பி படம்பிடிக்கும் தருணம் இது!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News