Home /News /business /

குருகிராம் சொசைட்டியில் பாதுகாப்பற்ற 700 குடியிருப்புகளை இடிக்க முடிவு

குருகிராம் சொசைட்டியில் பாதுகாப்பற்ற 700 குடியிருப்புகளை இடிக்க முடிவு

குருகிராம் சொசைட்டி

குருகிராம் சொசைட்டி

பேசிய அதிகாரி நிஷாந்த் யாதவ், இந்திய அரசு நிறுவனம் (India enterprise) வீடுகளை காலி செய்யும் குடியிருப்பாளர்களுக்கு மாற்று தங்குமிடத்தை வழங்கும் என்றார்.

குருகிராமில் (Gurugram) 700-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட, அரசுக்குச் சொந்தமான NBCC (இந்தியா) லிமிடெட் மூலம் கட்டப்பட்ட ஹவுசிங் சொசைட்டி (housing society) ஒன்று குடியிருக்க பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைவில் அந்த ஹவுசிங் சொசைட்டி இடக்கப்படும் என்று அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமின் துணை ஆணையர் நிஷாந்த் யாதவ், குறிப்பிட்ட ஹவுசிங் சொசைட்டியில் , 'கட்டமைப்பு மற்றும் கட்டுமான குறைபாடுகள்' இருப்பது தீவிர ஆய்விற்கு பின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட குடியிருப்பு வளாகம் இனி மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பானது அல்ல என்று கூறினார்.

எனவே 140 பிளாட் உரிமையாளர்கள் மற்றும் NBCC (இந்தியா) லிமிடெட் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து, செக்ட்டார் 37 D- பேஸ்டு NBCC கிரீன் வியூ சொசைட்டியில் (NBCC Green View society) வசிப்பவர்கள் வரும் மார்ச் 1-ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அதிகாரி நிஷாந்த் யாதவ், இந்திய அரசு நிறுவனம் (India enterprise) வீடுகளை காலி செய்யும் குடியிருப்பாளர்களுக்கு மாற்று தங்குமிடத்தை வழங்கும் என்றார். தவிர அதே அளவுருக்களுடன் (same parameters) தங்களுக்கு விருப்பமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல விரும்புவோருக்கும் மாத வாடகையை வழங்கவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றார்.

குருகிராமின் செக்டார் 109-ல் உள்ள சின்டெல்ஸ் பாரடிசோ (Chintels Paradiso) என்ற ஹவுசிங் காம்ப்ளக்ஸின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் இறந்த சில நாட்களுக்குப் பிறகு ஹவுசிங் சொசைட்டியை இடிக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹவுசிங் சொசைட்டியை இடிக்கும் இந்த முடிவு பிளாட் உரிமையாளர்களின் நலன் மற்றும் அவர்களுக்கும் கட்டிட ஆணையமான NBCC-க்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு சேர வேண்டிய உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு கண்காணிப்போம் என்றும் யாதவ் கூறி இருக்கிறார்.

Also read... முதலீடுக்கு வட்டி கூடவே வருமான வரியும் சேமிக்கலாம்.. இந்த திட்டத்தில் சேர இனியும் லேட் பண்ணாதீங்க!

37டி பிரிவில் உள்ள கிரீன் வியூ சொசைட்டி ஐஐடி டெல்லியால் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்குள் அப்பகுதியை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலைக்கு பில்டரின் நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (National Buildings Construction Corporation Limited) மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் பொறுப்பு என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இதனிடையே NBCC (இந்தியா) தலைவரும் நிர்வாக இயக்குநருமான PK குப்தா, எங்கள் நிறுவனம் 'குடியிருப்புவாசிகளின் அவலத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளது, எனவே தேவையான உதவிகள் மற்றும் நிவரணம் அளிப்பதற்கு தயாராக உள்ளது' என்றார்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி