குஜராத் மாநி்லத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5-ஜி சேவையை தொடங்க முடிவெடுத்துள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகம் தற்போது புதிய பாய்ச்சலை எட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது இந்தியாவில் 5-ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5-ஜி அலைக்கற்றைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசால் ஏலம் விடப்பட்டன. பலத்த போட்டிகளுக்கிடையே இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான ஜியோவும் 5-ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தது.
இதையடுத்து தீபாவளி முதல் நாட்டின் முக்கியமான ஐந்து நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டடு படிப்படியாக நாட்டின் பிற நகரங்களுக்கும் 5-ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக டெல்லி மற்றும் சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் ஜியோ 5 ஜி சேவையை வழங்கியது. அதன் அடுத்த கட்டமாக சோதனை முயற்சியாக குஜராத் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் விரைவில் 5-ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முழுமையாக 5-ஜி சேவை பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை பெற உள்ளது குஜராத் மாநிலம்.
இதையும் படிக்க : ஒரு நொடிக்கு ₹1.5 லட்சம் வருமானம் ஈட்டும் நிறுவனம் எது தெரியுமா?
முதலில் குஜராத்தில் உள்ள 33 மாவட்ட தலைநகரங்களிலும் 100 விழுக்காடு முழுமையான 5-ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தோன்றிய குஜராத் மண்ணில் 5-ஜி சேவையை தொடங்குவது தான் மிகச் சிறப்பானது என ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 5-ஜி சேவை வழங்குவதற்காக எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து குஜராத்தில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை முழுமையான இணைய வசதி கொண்ட பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. அதன் முன்னோட்டமாக குஜராத்தில் 5-ஜி சேவை அறிமுகம் செய்யும் நிகழ்வு இருக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரதமர் மோடியின் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த சேவை இருக்கும் எனவும், முன்னேறிய தொழில்நுட்பத்தால் லட்சக் கணக்கானோரின் வாழ்க்கை எப்படி மாறப் போகிறது என்பதை இந்தியாவிற்கு வெளிப்படுத்தும் முயற்சி தான் இது என்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி கூறியுள்ளார்.
இதையும் படிக்க : paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு
5-ஜி சேவை இந்தியாவில் வளர்ந்த நகர்பபுறங்களுக்கு மட்டுமோ, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமோ கிடைக்கும் என்பதில்லை. நாட்டின் அனைத்து பகுதிகளையும், ஒவ்வொரு குடிமகனையும் தொழில்நுட்ப முன்னேற்றம் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும், அப்போது தான் நாடு முழுவதும், உற்பத்தி, வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் என அனைத்துமே உயரும் என்பதை நோக்கியே தங்கள் பயணம் இருக்கிறது என அம்பானி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Gujarat, Jio, Reliance Jio