Home /News /business /

இந்த துணி கடையில் பணத்துக்கு பதில் கிரிப்டோகரன்சி கொடுத்து வாங்கலாமாம்..

இந்த துணி கடையில் பணத்துக்கு பதில் கிரிப்டோகரன்சி கொடுத்து வாங்கலாமாம்..

கூச்சி

கூச்சி

Gucci: கூச்சி ஆடை நிறுவனம் தங்கள் அமெரிக்க கடைகளில் மட்டும் ​​வாடிக்கையாளர்கள் பிட்பே மூலம் ஏப்காயினைப் பயன்படுத்திகூச்சி தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்த துணி கடையில் பணத்துக்கு பதில் கிரிப்டோகரன்சி கொடுத்து வாங்கலாமாம்..இத்தாலிய உயர்தர சொகுசு பேஷன் நிறுவனமானகூச்சி(Gucci) இப்போது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்டக் கடையில் வாங்கும் பொருட்களுக்கு கட்டணமாக ஏப்காயின் எனும் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகில் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்ளும் முதல் பெரிய நிறுவனம் இதுவே ஆகும்.

ஏப்காயின்(ApeCoin) என்பது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் கிரிப்டோ கரன்சி ஆகும்.  பணமாக அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் மூலம் உருவாக்கப்படும் இந்த நாணயங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள சில அரசுகள் கிரிப்டோ கரன்சிகளை  எதிர்த்தாலும் சில அரசுகள் இதை ஏற்றுக்கொண்டது. சில நிறுவங்கங்களும் கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை ஏற்றுக்கொள்ள முன்வருகின்றன.

அதன் ஒரு படியாக இப்போது கூச்சி ஆடை நிறுவனம் தங்கள் அமெரிக்க கடைகளில் மட்டும் ​​வாடிக்கையாளர்கள் பிட்பே மூலம் ஏப்காயினைப் பயன்படுத்தி கூச்சி தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது.

கூச்சி தனது ட்விட்டர் பதிவில், "இப்போது பிட்பே வழியாக ஏப்காயின் மூலம் பணத்தை செலுத்தலாம். அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கூச்சி கடைகளில் பெறப்படும் கிரிப்டோகரன்சிகளின் வரம்பை விரிவுபடுத்துகிறோம். மேலும் இதைக்கொண்டு Web3 எனும் தன இணை நிறுவன ஹவுஸின் ஆய்வுகளைச் செய்ய உள்ளோம் " எனக் குறிப்பிட்டுள்ளது.

Exclusive: இனி அரசு மானியம், பலன்களை பெற ஆதார் கட்டாயம்..UIDAI சுற்றறிக்கை

பிட்பே நிறுவனம், டோனி கல்லிப்பி மற்றும் ஸ்டீபன் ஜோடி ஆகியோரால்,மே 2011 இல் நிறுவப்பட்டது.பிட்பே என்பது கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்களுக்கான மொபைல் செக்அவுட் சேவையை வழங்குகிறது.பிட்பே நிறுவனம் பிளாக்செயின் துறையில் தற்போது நுழைந்துள்ளது.

இது நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் பிட்காயினின்  திறனைக் கண்ட பிறகு, உலகளாவிய அளவில் பணம் செலுத்துதல்களை வேகமாகவும், பாதுகாப்பானதாகவும், குறைந்த விலையிலும் செய்ய இருக்கிறது. உலகெங்கிலும் பிட்காயின் வணிகங்கள் மற்றும் அதைக்கொண்டு மக்கள் எவ்வாறு பணத்தை அனுப்புவது, பெறுவது மற்றும் சேமிப்பது என்பதை உள்ளடக்கிய பிளாக்செயின் கட்டண தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அவர்கள் முன்னோடிகளாக உள்ளனர்.

டிஜிட்டல் நாணயத்தை பல நாடுகள் ஏற்றுக்கொண்டதன் காரணமாக, இந்த ஆண்டு மே மாதம் முதல்  கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தி கூச்சி தனது தயாரிப்புகளுக்கான கட்டணங்களை ஏற்கத் தொடங்கியது. அதோடு கூச்சி , பிட்காயின் , பிட் காயின் கேஷ் , எதெரியம், டோகிக்காயின், ஷீபா இனு, ராப்ட் பிட்காயின் மற்றும் சில அமெரிக்க டாலர்-பெக்டு ஸ்டேபிள்காயின்கள் போன்ற பல டிஜிட்டல் பணத்தை ஏற்றுக்கொள்கிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Crypto currency, Cryptocurrency, Fashion designer

அடுத்த செய்தி