தனியார் மருத்துவமனை அறைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது நடுத்தர மக்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சிலில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கப்படும் ஐசியு அல்லாத படுக்கைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நடுத்தர மக்களையே அதிகமாக பாதிக்கும் என பார்க்கப்படுகிறது.
தேசிய மாதிரி ஆய்வு எனப்படும் (national sample survey). தரவுகள் படி 62% மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"பணக்காரர்களை விட நடுத்தர மக்கள் தான் அரசுக்கு முறையாக வரி செலுத்துபவர்கள். ஆனால் அவர்கள் மீது தான் மீண்டும் வரி சுமை அதிகரிக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் போல் அல்லாமல் ஒரு மருத்துவர் சொந்த செலவில் நடத்தி வரும் சிறிய நர்சிங் ஹோம்களில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது" என மருத்துவரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் கூறுகிறார்.
இந்திய மருத்துவ சங்கம் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா, "ஏற்கெனவே மருத்துவமனை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக மருத்துவத்துக்கு செலவு செய்யும் விகிதம் அதிகரித்துள்ளது. இதை அரசு திரும்ப பெற வேண்டும்" என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST, GST council