தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய்... டிசம்பரில் மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய்!

2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் உள்நாட்டு பரிமாற்றத்தின் மூலம் ஜிஎஸ்டி வருமானம் 16 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது

தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய்... டிசம்பரில் மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய்!
ஜிஎஸ்டி
  • News18
  • Last Updated: January 1, 2020, 9:49 PM IST
  • Share this:
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 1 லட்சம் கோடி ரூபாய் என்னும் மைல்கல்லை எட்டி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 97,276 கோடி ரூபாய் ஆக இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 1,03,492 கோடி ரூபாய் ஆக உயர்ந்தது. 2019 டிசம்பரில் வருவாய் 1,03,184 கோடி ரூபாய் ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக அரசின் குறிக்கோளான 1 லட்சம் கோடி ரூபாய் என்னும் மைல்கல்லை ஜிஎஸ்டி வருவாய் எட்டி வருகிறது.

மொத்தம் வசூலான 1,03,184 கோடி ரூபாயில் சிஜிஎஸ்டி 19,962 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி 26,792 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 48,099 கோடி ரூபாய் மற்றும் செஸ் 8,331 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் உள்நாட்டு பரிமாற்றத்தின் மூலம் ஜிஎஸ்டி வருமானம் 16 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் பார்க்க: நாள் ஒன்றுக்கு 20- 26 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தும் ஏர் இந்தியா..!
First published: January 1, 2020, 9:49 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading