ஹோம் /நியூஸ் /வணிகம் /

இதுவரை இல்லாத உச்சபட்ச அளவு.. ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி வரி வசூல்!

இதுவரை இல்லாத உச்சபட்ச அளவு.. ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி வரி வசூல்!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாக மார்ச் மாதத்தில் 1.40 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியிருந்தது.

  நாட்டில் ஜிஎஸ்டி வரி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல், மிக அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.68 லட்சம் கோடிக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளது. இது மார்ச் மாத விற்பனைக்கு கிடைத்த வரியாகும். மத்திய நிதியமைச்சகம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

  கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போதைய வரி வசூல் என்பது 20 சதவீதம் அதிகமாகும். வரி விதிப்பு முறையாக அமல்படுத்தப்படுவது, வரி ஏய்பாளர்களுக்கு எதிராக அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றின் மூலமாக இத்தகைய வளர்ச்சி காணப்படுகிறது.

  ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்!

  2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுயமாக தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர் - 3பி கணக்குகளின் எண்ணிக்கை 1.06 கோடி ஆகும். இதில் 97 லட்சம் கணக்குகள் மார்ச் மாதத்துடன் தொடர்புடையவை. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 92 லட்சம் ஜிஎஸ்டிஆர் - 3பி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டிஆர்-1 வகையில் 1.05 லட்சம் கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவிக்கிறது.

  மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக வரி வசூல் அதிகரிப்பு

  ஜிஎஸ்டி வரி வசூல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்த அளவுக்கு வரி வசூல் ஆகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பது என்பது வரி செலுத்துவோரிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  குழந்தைகள் வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? ஒருவேளை செய்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும் முழு விபரம்!

  உரிய காலத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யவும், அதனை எளிமையாக்கவும், தவறிழைக்கும் வரி ஏய்பாளர்களை டேட்டா அனலைடிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் அடிப்படையில் கண்டறிந்து கடும் நடவடிக்கை வரி விதிப்பு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும் இது சாத்தியமாகியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மாநிலங்களுக்கும் பங்கு உண்டு

  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பதில் மாநிலங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜிஎஸ்டி வரி மேம்பாடு மற்றும் வசூல் ஆகியவற்றில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்ட முயற்சிகளை உண்மையாகவே அங்கீகரிப்பதோடு, மிகுந்த பாராட்டுகளை மத்திய அரசு தெரிவித்துக் கொள்கிறது. நாம் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக நமது பொருளாதாரம் நிலையான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாக மார்ச் மாதத்தில் 1.40 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியிருந்தது. அதை ஒப்பிடுகையில் தற்போதைய வரி வசூல் என்பது ரூ.25,000 கோடி அதிகமாகும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, GST