ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல பொருட்கள் , சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தியமைக்க அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாகவே , புதிய ஜிஎஸ்டி வரி ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விளைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஜூலை 18ம் தேதி முதல் அதிகரிக்கும் எனவும், மேலும் வேறு சில பொருட்களின் விலைகள் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!
ஜிஎஸ்டி திருத்தம் நடைமுறைக்கு வரும்போது விலை அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் விலை குறையும் பொருட்களின் பட்டியலை நாம் தற்போது காணலாம்.
ஜிஎஸ்டி விகித திருத்தத்தில் எந்த பொருள்களின் விலை அதிகமாக இருக்கும்?
லீகல் மெட்ராலஜி ( Legal Metrology) சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த பொருட்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே பேக்கிங் செய்யப்பட்டதால் இதற்கு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு உண்டு.
காசோலைகளை வழங்குவதற்கு (cheques) வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ITC இல்லாத அறைக்கு வசூலிக்கப்படும் தொகைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
PM Kisan status : 12-வது தவணை எப்போது வரும்? வெளியானது புதிய தகவல்!
மேலும் அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள்( Maps and charts including atlases ) ஜூலை 18 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும், ஹோட்டல் அறைகளை (hotel room ‘s) 12 சதவீத ஜிஎஸ்டிக்கு கீழ் ஒரு நாளைக்கு ரூ.1,000க்குள் கொண்டு வரவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் இந்த தலைகீழ் வரி கட்டமைப்பால் வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் LED விளக்குகள், LED விளக்குகள் சாதனங்கள் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்பனர்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், ஃபோர்க்ஸ் போன்ற சில்வர் பொருட்கள், லேடில்ஸ் ஸ்கிம்மர்கள், கேக்- போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி விகித திருத்தத்தில் எவற்றுக்கெல்லாம் GST குறையும்:
தனியார் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பாதுகாப்புப் பொருட்களின் மீதான GST யில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
எரிபொருள்களை உள்ளடக்கிய ஆபரேட்டர்களுடன் கூடிய சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதில், GST 18 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 12 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் , உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடுகளை ஈடுசெய்ய உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், கண்விழி லென்ஸ் இவற்றின் GST விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் எனவும் இந்த கவுன்சில் தெரிவிக்கிறது.
கேசினோ, ஆன்லைன் கேமிங்கில் ஜிஎஸ்டி
கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரைப் பந்தயம் குறித்து அமைச்சர்கள் குழு (GoM), இந்த நடவடிக்கைகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் வகையில் பணியை மேற்கொண்டது,இப்படியாக GST யின் வரி விதிப்பில் மாற்றங்கள் வரவுள்ளதாக GST கவுன்சில் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST, GST council, Import tax