சமீபத்தில் நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்கு (GST-க்கு) உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை நீங்கள் ரத்து செய்ய திட்டமிட்டால், முன்பை விட நீங்கள் இப்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய ரயில்வே இயக்கும் ரயில்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்கள் காரணமாக ரயில் டிக்கெட்டுகளுக்கான டிமாண்ட் வெகுவாக அதிகரிக்கிறது.
எனவே ரயில் பயணங்களின் போது தங்களது சீட்டை கன்ஃபார்ம் செய்து கொள்வதற்காக பலர் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே புக்கிங் செய்து கொள்கின்றனர். எனினும் திட்டமிட்டபடி ரயில் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போகும் போது முன்கூட்டியே புக் செய்து வைத்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே டிக்கெட் கேன்சலேஷன் சார்ஜ் தொடர்பான விதியை மாற்றி இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் நிதி அமைச்சகத்தின் டேக்ஸ் ரிசர்ச் யூனிட் வெளியிட்ட சுற்றறிக்கையில், உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டது என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ஒரு "கான்ட்ராக்ட்" (contract)-ஆக கருதப்படுகிறது. இதன் கீழ் சேவையை வழங்கும் IRCTC / Indian Railways நுகர்வோருக்கு சேவைகளை வழங்க ஒப்பு கொள்கிறது மற்றும் உறுதியளிக்கிறது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.!
மேலும் சுற்றறிக்கையின்படி இந்த GST பிடித்தமானது முதல் வகுப்பு அல்லது ஏசி கோச்சில் பயணம் செய்ய புக் செய்யப்பட்டிருக்கும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. முதல் வகுப்பு அல்லது ஏசி கோச் பயணத்திற்கான டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும் போது அதற்கான கேன்சலேஷன் கட்டணம் 5% GST-க்கு உட்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரயில் டிக்கெட் மட்டுமல்லாது ஹோட்டல் அல்லது விமான முன்பதிவுகளை கேன்சல் செய்ய வேண்டியிருந்தால் இதே கொள்கை பொருந்தும், இந்த சூழலில் ரத்து கட்டணங்கள் பிரைமரி சர்விஸின் அதே ஜிஎஸ்டி விகிதத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Also Read : ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு டிக்கெட்களை கேன்சல் செய்யும் போது, சேவை கட்டணமாக ரூ.240 பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போதைய புதிய விதி காரணமாக ரூ.240-க்கு 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். அதுவே ரயில் புறப்படும் 48 முதல் 12 மணி நேரத்திற்குள் கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் விலையில் 25% கேன்சலேஷன் கட்டணமாக விதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.