புயல் பாதிப்பு: கேரளாவுக்கு 2 ஆண்டுக்கு 1% செஸ் வரி விலக்கு... தமிழகத்துக்கும் கிடைக்குமா?

இதுபோன்ற வரி விலக்குகளைத் தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தந்தால் நன்றாக இருக்கும் கஜா புயலில் பாதிப்படைந்த வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Web Desk | news18
Updated: January 7, 2019, 8:47 PM IST
புயல் பாதிப்பு: கேரளாவுக்கு 2 ஆண்டுக்கு 1% செஸ் வரி விலக்கு... தமிழகத்துக்கும் கிடைக்குமா?
ஜிஎஸ்டி
Web Desk | news18
Updated: January 7, 2019, 8:47 PM IST
கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் 1 சதவீத செஸ் வரியை 2 ஆண்டுகளுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள 1 சதவீத செஸ் வரியை கேரளாவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறு சீரமைப்புப் பணிகளுக்கு 2 ஆண்டுகள் வரை பயன்படுத்திக்கொள்ள ஜிஎஸ்டி கவின்சில் அனுமதி அளித்துள்ளதாகப் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கேரளாவில் ஜிஎஸ்டி கீழ் பிடித்தம் செய்யப்படும் ஒரு சதவீத செஸ் வரியை மாநில அரசு வெள்ள நிவாரணமாக 2 ஆண்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதே போன்று இயற்கை பேரழிவுகளால் ஏதேனும் மாநிலங்கள் பாதிப்படைந்து இருந்தால் ஜிஎஸ்டி கவுன்சிலை அணுகி பேரிடர் செஸ் வரியைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு ஜிஎஸ்டி கவுன்சிலை அணுகி ஓக்கி மற்றும் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காகப் பேரிடர் செஸ் வரி தொகையைப் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறு பக்கம் இயற்கை பேரிடரில் சிக்கிய பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள போது முழு ஜிஎஸ்டி வரி விலக்கும் அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சரான ஷிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன விலக்குகள் குழுவில் பிரதமர் மோடியும் உறுப்பினர் என்பதால் அவரிடமும் அனுமதி பெற வேண்டி வரும்.

மேலும் ஜிஎஸ்டியில் இயற்கை பேரிடர் பாதித்த பகுதி சிறு, குறு நிறுவனங்களுக்கு வரி விகிதத்திலும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற வரி விலக்குகளைத் தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தந்தால் நன்றாக இருக்கும் என கஜா புயலில் பாதிப்படைந்த வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading...
மேலும் பார்க்க: தமிழகத்தில் ரூ.140 கோடி மதிப்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...