ஜிஎஸ்டி மூலம் உங்கள் வீட்டு பட்ஜெட்டில் 320 ரூபாய் மிச்சமாவது தெரியுமா..?

ஸ்நாக்ஸ், சாக்லெட் பொருட்களிலிருந்து மட்டும் ஜிஎஸ்டி-யால் 38 ரூபாய் மிச்சப்படுகிறதாம்.

ஜிஎஸ்டி மூலம் உங்கள் வீட்டு பட்ஜெட்டில் 320 ரூபாய் மிச்சமாவது தெரியுமா..?
ஜிஎஸ்டி
  • News18
  • Last Updated: December 2, 2019, 7:31 PM IST
  • Share this:
இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி முறையை பின்பற்றி வருவதால் ஒவ்வொரு வீட்டின் மாதாந்திர மளிகை பட்ஜெட்டிலும் 320 ரூபாய் மிச்சமாகிறதாம்.

ஜிஎஸ்டி தாக்கம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை, ஸ்நாக்ஸ் போன்ற மாதாந்திர பட்ஜெட்டில் சராசரியாக ஒவ்வொரு வீட்டின் மளிகை பட்ஜெட்டிலும் மாதம் 320 ரூபாய் மிச்சமாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழு ஆய்வு விவரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு அரசு அதிகாரி குறிப்பிட்டுள்ளதாவது, “மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை மிச்சமாக்க ஜிஎஸ்டி உதவுகிறது. குறிப்பிட்ட வருமானத்துக்கு மேல் உள்ளவர்கள் நேரடி வரியாகவும் நாட்டில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் மறைமுக வரியாகவும் செலுத்தி வருகின்றனர்.


ஆனால், ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரி செலுத்துவது குறைந்ததுள்ளது. இதனாலே மக்களின் பட்ஜெட்டில் மாதாந்திர செலவில் ஒரு தொகை மிச்சமாகிறது. அரிசி மற்றும் பருப்பு வாங்குவதற்கான மாதாந்திர பட்ஜெட்டில் மட்டும் 94 ரூபாய் ஜிஎஸ்டியால் மிச்சமாகிறது. அரிசி, பருப்புகள் மூலம் செலுத்தப்படும் மறைமுகம் வரி ஜிஎஸ்டி-க்கு முன்பு 2.5% முதல் 2.75% வரை இருந்தது”.

ஸ்நாக்ஸ், சாக்லெட் பொருட்களிலிருந்து மட்டும் ஜிஎஸ்டி-யால் 38 ரூபாய் மிச்சப்படுகிறதாம். சமையல் எண்ணெய்க்கான பட்ஜெட்டில் மறைமுக வரி குறைந்ததால் மாதம் 15 ரூபாய் ஒவ்வொரு வீட்டுக்கும் மிச்சமாகிறதாம்.

மேலும் பார்க்க: ஊதிய உயர்வு 9.2% ஆக அதிகரிக்கும்... ஆசியாவிலேயே அதிக சம்பளம் தரும் நாடாக இந்தியா உயரும்!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்