வருத்தத்தில் இருந்த வணிகர்களுக்கு ஜாக்பாட்! ஜிஎஸ்டி விலக்கு வரம்பு ₹40 லட்சமாக அதிகரிப்பு!

20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகமாகும்போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று இருந்த வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 5:19 PM IST
வருத்தத்தில் இருந்த வணிகர்களுக்கு ஜாக்பாட்! ஜிஎஸ்டி விலக்கு வரம்பு ₹40 லட்சமாக அதிகரிப்பு!
அருண் ஜேட்லி
Web Desk | news18
Updated: January 10, 2019, 5:19 PM IST
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில்வணிக நிறுவனங்களுக்கான வரி விலக்கை இரட்டிப்பாக்குவதாக  நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதனால் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகமாகும்போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று இருந்த வரம்பை 40 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி வந்த பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெறும் அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இவர்களைத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டும் என்று இருந்த மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

விற்பனை வணிகங்களுக்கு மட்டும் இருந்து வந்த Composition Scheme என அழைக்கப்படும் தொகுப்புச் சலுகை திட்டத்தைச் சேவைத் துறை சார்ந்த வணிகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Composition Scheme என்றால் என்ன?

ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு உள்ள ஒரு எளிமையான வழி Composition Scheme. சிறு வணிகர்கள் குறிப்பிட்ட அளவிலான டர்ன்ஓவர் (விற்று முதல்) வரை சிரமமான ஜிஎஸ்டி தாக்கல் முறையிலிருந்து விலக்கு பெற முடியும்.

இந்த Composition Scheme வரம்பு முன்பு 1 கோடியாக இருந்து வந்தது. அதை இன்று நிதி அமைச்சர் 1.5 கோடி ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் படிக்கபிளாஸ்டிக் கெடுபிடி என்று வியாபாரிகளை துன்புறுத்தக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...