முகப்பு /செய்தி /வணிகம் / சிமெண்ட் விலை குறையுமா?... டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...!

சிமெண்ட் விலை குறையுமா?... டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...!

சிமெண்ட் ( மாதிரி படம்)

சிமெண்ட் ( மாதிரி படம்)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் வர்த்தகத்தில் நடக்கும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 28 சதவிகிதத்தில் இருந்து குறைக்க வாய்ப்புள்ளதா என ஆராய குழு அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, ஆன்லைன் விளையாட்டு, கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மேகாலயா முதலமைச்சர் தலைமையிலான குழுவின் அறிக்கையும் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Cement, GST council