டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெற்ற 40வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாநில அமைச்சர்கள் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள போதிலும், அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதை விரும்பவில்லை என்றார். 2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு தாமதம் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகக் கூறியனார்.
இந்த சலுகை வரி செலுத்தாதவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள் ஜிஎஸ்டிஆர்-3பி என்ற படிவத்தை பூர்த்தி செய்தால் அவர்களுக்கு மே, ஜூன், ஜூலை மாதத்திற்கான கணக்கு தாக்கல் தாமத கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும், அடுத்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய செஸ் வரி இழப்பீட்டு தொகை பற்றி மட்டும் விவாதிக்கப்படும் என்று நிர்மலா சீதாரமன் கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.